சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

பதிவு செய்த நாள் :
இந்தியாவுக்கு புது தலைவலி
தீர்வு காண்பாரா நிர்மலா சீதாராமன்?

இந்திய மக்கள் தொகை, 130 கோடியை கடந்துவிட்டது; மொபைல்போன் இணைப்புகளின் எண்ணிக்கையோ ஏறத்தாழ, 110 கோடி. தொலைதொடர்புத் துறையின் தொழில்நுட்ப புரட்சியால் நாடு முழுவதும், 62 கோடி பேர் இணையதள சேவைகளை பயன்படுத்துகின்றனர். மொத்த மக்கள் தொகையில், 45 சதவீதம் பேரிடம், 'ஸ்மார்ட் போன்' புழங்குகிறது.

India,Nirmala,Nirmala Sitharaman,இந்தியா,நிர்மலா,நிர்மலா சீதாராமன்


கோடீஸ்வரர் முதல், பொருளாதாரத்தில் கடைகோடியில் இருப்பவர் வரை, மொபைல் போன் வைத்துள்ளனர். கால மாற்றம், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மொபைல்போன் பயன்படுத்துவது தவறில்லை. ஆனால், அதை எந்த வகையில் பயனுள்ளவாறு பயன்படுத்திட வேண்டும் என்ற விழிப்புணர்வும் அவசியம். வாடிக்கையாளர்களை கவர, மொபைல்போன் சேவை நிறுவனங்கள் போட்டி போட்டு, 'டேட்டா பிளான்'களை வழங்குகின்றன. உதாரணமாக, 'ஜியோ', 399 ரூபாய்க்கு, 84 நாட்களுக்கு, 126 ஜி.பி.,யும், அளவற்ற அழைப்புகளையும் வழங்குகிறது. இதேபோன்று, பி.எஸ்.என்.எல்., - ஏர்டெல், வோடபோன் உள்ளிட்ட நிறுவனங்களும் பல்வேறு சலுகைகளை அளிக்கின்றன.

குறைந்தது மாதம், 100 ரூபாய் இருந்தால் போதும், 30 நாட்களும் விரும்பிய நேரத்தில் வீடியோ பார்க்கலாம்; பகலோ, இரவோ மணிக்கணக்கில் விரும்பிய நபருடன் உரையாடலாம்; நல்லதுதான், ஆனால் எதுவரை? எந்த ஒரு வசதி வாய்ப்பையும் மிக மிக கட்டுப்பாட்டுடன் பயன்படுத்தும் வரை; மொபைல்போன் பேசுவதற்காக மட்டுமே இருந்தவரை, அதன் பயன்பாடு அவசியமான ஒன்றாக இருந்தது. ஸ்மார்ட்போன்கள் வந்த பிறகு, அதுவும் 'வாட்ஸ் ஆப், பேஸ்புக், யூ டியூப் வசதிகள் போனில் வந்த பிறகு, இதை நல்ல வழிகளுக்கு

பயன்படுத்துவதைவிட, பொழுது போக்குவதற்கானதாக மாறியது; ஊழியர்கள் பணி நேரத்தில் அநாவசியமாக பயன்படுத்துவதும் அதிகரித்துவிட்டது.

வாட்ஸ் ஆப், பேஸ் புக், யூ டியூப் உள்ளிட்ட வசதிகளை எந்த நேரத்தில், எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதற்கு எவ்வித வரைமுறையும் கிடையாது; அது, உபயோகிக்கும் நபரின் தனிமனித ஒழுக்கத்தைச் சார்ந்தது. சாலை போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் போலீஸ்காரர், பணி நேரத்தில் போனில் மூழ்கியிருக்கிறார்; பள்ளி மாணவர்கள் வகுப்பறையில் பயன்படுத்துகின்றனர்; அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள் பணி நேரத்தில் மொபைல் போனில் அவசியமற்ற விஷயங்களை ரசித்து பொழுதைக் கழிக்கின்றனர்.

இதற்கெல்லாம் மூலகாரணம், குறைந்த கட்டணத்தில் மொபைல்போன் நிறுவனங்கள் வழங்கும் சலுகைகள். இலவசமாகவோ அல்லது சலுகையுடனோ வாடிக்கையாளர்களுக்கு இவ்வசதிகள் கிடைப்பது நல்ல விஷயம்தான். ஆனால், இந்தியாவின் மொத்த இணையதள பயனர்களில், 50 சதவீதம் பேர் அவசியமற்ற, பார்க்க தகுதி இல்லாத, சிறுவர்கள் மனதை சஞ்சலப்படுத்தும் விஷயங்களை ரசிக்கின்றனர் என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. இதைத் தடுத்திட மத்திய அரசு, குறிப்பாக, நிதியமைச்சகம் நடவடிக்கை மேற்கொள்வது அவசியம்.

பேஸ்புக், வாட்ஸ் ஆப், யூ டியூப் உள்ளிட்ட பல நிறுவனங்கள், தங்களது சேவையினை கட்டணமின்றி இலவசமாகவே வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்றன; இந்நிறுவனங்கள், மத்திய அரசுக்கு வரி என, ஒரு பைசா கூட செலுத்துவதில்லை. ஆனால், மேற்கண்ட வசதிகளை பயன்படுத்தி, வர்த்தகர்கள் பலர் இங்கு தொழில் செய்கின்றனர். இலவச சேவையின் காரணமாகவே, பலரும், வாட்ஸ் ஆப், பேஸ்புக், யூ டியூப் அடிமைகளாக மாறிவிட்டனர். சமூக வலைதளங்களை பயன்படுத்தி தொழில் செய்வோருக்கும், பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் தவறான தகவல்களை பரப்புவோருக்கும், அவசியமற்ற இணையதள விஷயங்களை பார்ப்போருக்கும், மத்திய அரசு, மறைமுகமாக வரி விதிக்கலாம்.

மேற்கண்ட பயனர்களின், பயனீட்டு அளவிற்கு ஏற்ப, சம்பந்தப்பட்ட மொபைல் போன் சேவை

Advertisement

நிறுவனங்களுக்கு அரசு வரி விதிக்கும்போது, அந்நிறுவனங்கள் அதற்கான வரியை பயனர்களிடம் ரசீது வழங்கி வசூலித்துக்கொள்ளலாம். மேற்கண்ட செயல்களில் ஈடுபடும் நபருக்கு தினமும், 1 ரூபாய் வீதமோ அல்லது, ஆண்டுக்கு, 300 ரூபாய் என, மறைமுக வரி விதிப்பு செய்தால், வாட்ஸ் ஆப், பேஸ் புக், யூ டியூப் உள்ளிட்ட சமூக வலைதள பயனர்கள் ஏறத்தாழ, 50 கோடி பேர் வாயிலாக, ஆண்டுக்கு, 15 ஆயிரம் கோடி ரூபாய் வரை அரசுக்கு வருவாய் கிடைக்கும். தேவையற்ற விஷயங்களை பார்வையிடுவோர், வரி விதிப்பால் தங்களின் பயன்பாட்டை நிச்சயம் குறைத்துக்கொள்வர் அல்லது நிறுத்தி விடுவர்.

பணி நேரத்தில் அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள், இணையதள சேவையை முறையற்ற வகையில் பயன்படுத்துவதும் குறையும். நிறுவன ஊழியர்களின் பணித்திறன்கூடி, உற்பத்தியும் அதிகரிக்கும். தற்போது, பணிநேர மொபைல் போன் உபயோகத்தால் பல நிறுவனங்களில் ஊழியர்களின் பணித்திறன் குறைந்து உற்பத்தி பாதிப்பும் ஏற்பட்டிருப்பதை காணமுடிகிறது. வளமான இந்தியாவிற்கு திறமையான உற்பத்தியும், சரியான சேவையும் இருந்தால் மட்டுமே போட்டி உலகில் சமாளிக்க முடியும். முக்கியமாக, பணி நேரத்தில் அனாவசிய செயலில் ஈடுபடுவதை, தற்போதே அரசு கட்டுப்படுத்த வேண்டும்.

இல்லாவிடில், அதன் பாதிப்பிலிருந்து இந்தியா மீள்வது சிரமம். இப்பிரச்னைக்கு தீர்வு காண முடியாமல் பல நிறுவனங்கள் திணறுகின்றன. இதற்கு தீர்வு காண, வரி விதிப்பு நடவடிக்கையை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மேற்கொள்ள வேண்டும்.

- இல.ஆதிமூலம், வெளியீட்டாளர், தினமலர், கோவை.


Advertisement

வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Naagarazan Ramaswamy - Chennai,இந்தியா
14-ஜூலை-201908:14:49 IST Report Abuse

Naagarazan Ramaswamyமிகவும் பயனுள்ள கட்டுரை. ஒருவர் தொலைபெசியில் பேசினால் உடனே தன் செல்போனை எடுத்து நொண்டி கொண்டிருக்கும் வியாதி இன்று பலரிடையேயும் பார்கிறேன். இது பின்னால் மன வியாதியையும் தூண்டிவிடுமோ என்று நினைக்கிறேன் . மற்றும் ஓசியில் செய்தி அனுப்பித்து தொல்லை கொடுக்கிறார்கள் பலர். இவற்றை குறைக்க தடுக்க, இந்த பயன்பாட்டிற்கு வரி விதித்தால் நல்லது. நிர்மலா அவர்கள் கவனம் செலுத்துவாரா?

Rate this:
Dr Rajendran Thangavel - Dindigul ,இந்தியா
13-ஜூலை-201909:08:46 IST Report Abuse

Dr Rajendran ThangavelIt is very difficult to avoid the use of technology in social life of the people. The self-restraint is the best way for the individuals and we can't ignore that the digital technology is almost likely to be free like air and light (not water which is na economic product now) and it is not really bad. The organizarions must control their workers from using it unncessarly. I can't prevent my domestic-help from chatting through mobile phone while working at my home. We have to respect the individual's right but we can't allow our children go astray due to the free avaiability of technology. I think these kinds of 'distractions and dangers' existed even before 50 years ago in the forms of printed books with pictures. Those distractions are available in the live-form due to the global reach of Google. People must be self-restraint and gift it to their children when they are still young.No other go.

Rate this:
Nagarajan1 - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
13-ஜூலை-201900:08:39 IST Report Abuse

Nagarajan1பதிப்பாளருடையது பயனுள்ள, படிப்பினையுள்ள, சமுதாய நலனில் அக்கறையுள்ள கட்டுரை.

Rate this:
மேலும் 26 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X