பொது செய்தி

தமிழ்நாடு

பயணிகளுக்கு வசதி செய்யாமல் விளம்பரமா!நிறுவனங்களுக்கு மாநகராட்சி நோட்டீஸ்

Added : ஜூலை 11, 2019
Advertisement

கோவை:கோவை மாநகரப் பகுதியில் உள்ள பஸ் ஸ்டாப்புகளில், பயணிகளுக்கு வசதிகள் செய்து தராமல், விளம்பரம் மட்டும் செய்யும் நிறுவனங்களுக்கு, மாநகராட்சியில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.கோவையில் உள்ள பிரதான ரோடுகளில், 331 பஸ் ஸ்டாப்புகளில் பயணிகள் நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில், பயணிகளுக்கு இருக்கை வசதி, வழித்தடத்தில் செல்லக்கூடிய பஸ்களின் வழித்தட எண்களுடன் செல்லும் நேரம், மின் விளக்கு, கடிகாரம், குப்பை போட தொட்டி உள்ளிட்ட வசதிகள் செய்திருக்க வேண்டும்.தி.மு.க., ஆட்சிக்காலத்தில், செம்மொழி மாநாடு நடத்திய போது, அவிநாசி ரோடு, திருச்சி ரோடு உள்ளிட்ட பிரதான சாலைகளில், தனியார் பங்களிப்புடன் பயணிகளுக்கான நிழற்குடைகள் அமைக்கப்பட்டன.நிழற்குடைகளுக்கான செலவினங்களை, அந்நிறுவனங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும். அதில், விளம்பரம் செய்து கொள்ளலாம் என அனுமதி அளிக்கப்பட்டது. காலப்போக்கில், நிழற்குடைகளில் எவ்வித வசதிகளும் செய்யப்படவில்லை.இருக்கை, மேற்கூரை இருப்பதில்லை; பஸ் வழித்தட எண் இருப்பதில்லை; பிளாட்பாரம் கற்கள் கூட பெயர்ந்து கிடக்கின்றன.
கடந்த சில வாரங்களாக, நிழற்குடையில் உள்ள பழைய விளம்பரங்களை எடுத்து விட்டு, புதிய விளம்பரங்கள் ஒட்டும் பணி, துரிதகதியில் நடந்து வருகிறது.விளம்பரம் கிழிக்கப்படும்மாநகராட்சி நகரமைப்பு பிரிவில் விசாரித்தபோது, 'பயணிகள் நிழற்குடையில் விளம்பரம் செய்வதற்கான அனுமதி காலம், வரும் செப்., மாதம் முடிகிறது. அதன் பின், விளம்பரம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது.பயணிகளுக்கு எவ்வித வசதியும் செய்து கொடுக்காமல், விளம்பரம் மட்டும் செய்யும் நிறுவனங்களுக்கு மாநகராட்சியில் இருந்து நோட்டீஸ் அனுப்பி வருகிறோம். அதன் பிறகும் வசதி செய்யவில்லை எனில், விளம்பரங்கள் கிழிக்கப்படும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X