சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறைபிடிப்பு! விவசாய கிணற்றில் தண்ணீர் உறிஞ்சிய லாரி...ஆமூரில் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

Added : ஜூலை 11, 2019
Advertisement
 சிறைபிடிப்பு! விவசாய கிணற்றில் தண்ணீர் உறிஞ்சிய லாரி...ஆமூரில் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

திருப்போரூர்:விவசாயக் கிணற்றில் இருந்து, தண்ணீர் திருடிய, 'டேங்கர் லாரி'யை, ஆமூர் கிராம மக்கள் சிறைபிடித்தனர். பின், அவர்கள் மறியலில்ஈடுபட்டதால், அப்பகுதியில், நான்கு மணி நேரம், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருப்போரூர் அடுத்த, ஆமூர் ஊராட்சியில், ஆமூர், பொருந்தவாக்கம் ஆகிய கிராமங்கள் உள்ளன. இங்கு, 3,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.இப்பகுதிகளில் உள்ள விவசாயக் கிணறுகளில் இருந்து, தினமும், 40க்கும் மேற்பட்ட, டேங்கர் லாரிகள் மூலம், தண்ணீர் உறிஞ்சப்படுகிறது. அவ்வாறு உறிஞ்சப்படும் தண்ணீர், சென்னையின் பல பகுதிகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.விவசாயக் கிணற்றில் இருந்து, தொடர்ந்து தண்ணீர் எடுப்பதால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, இப்பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுஉள்ளதாக, பொதுமக்கள் கூறுகின்றனர்.
இதனால், கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுக்க கூடாது எனக் கூறி, 5ம் தேதி, ஒரு டேங்கர் லாரியை சிறைபிடித்து, மறியலில் ஈடுபட்டனர்.நடவடிக்கைஅப்போது, 'இனிமேல், டேங்கர் லாரியில் தண்ணீர் எடுத்து செல்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என, போலீசார் மற்றும் வருவாய் துறையினர் கூறியதால், போராட்டத்தை அவர்கள் கைவிட்டனர்.இந்நிலையில், அதே பகுதி விவசாயக் கிணற்றில் இருந்து, தண்ணீர் எடுத்து, டேங்கர் லாரிகள் சென்றன.
இதையறிந்த அப்பகுதியினர், 100க்கும் மேற்பட்டோர், நேற்று காலை, 9:00 மணிக்கு, தண்ணீர் எடுத்து சென்ற ஒரு டேங்கர் லாரியை மறித்தனர்.பின், திருப்போரூர் - -திருக்கழுக்குன்றம் சாலை, ஆமூர் பஸ் நிறுத்தத்தில், லாரியை சிறைபிடித்து, அங்கேயே அமர்ந்து, மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த மானாம்பதி, திருப்போரூர் போலீசார் மற்றும் துணை தாசில்தார் உள்ளிட்டோர், மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சு நடத்தினர். 'கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுக்கும் லாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.
அப்போது மக்கள், 'கடந்த முறை, தண்ணீர் லாரியை சிறைபிடித்த போதும், இதையே தான் சொன்னீர்கள். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. கிணற்றில், மீண்டும் தண்ணீர் எடுக்கின்றனர்' என, ஆவேசமாக கூறினர்.பறிமுதல்பின், 'கிணற்றின் உரிமையாளர் மற்றும் லாரியின் உரிமையாளர், கிணறுகளில் தண்ணீர் எடுக்க மாட்டோம் என, எங்கள் கண்முன் உறுதி அளித்து, எழுதி தர வேண்டும்' என, நிபந்தனை வைத்தனர்.இதையடுத்து, போலீசார் மற்றும் வருவாய் துறையினர், தண்ணீர் எடுக்கப்படும் விவசாயக் கிணறு இருக்கும் இடத்திற்கு சென்று, அங்கு பொருத்தப்பட்டிருந்த மோட்டாரை பறிமுதல் செய்தனர். பின், மறியலை கைவிடும்படி, பொதுமக்களிடம் மீண்டும் வலியுறுத்தினர்.
எனினும், பொதுமக்கள், மறியலை தொடர்ந்தனர். பின், மதியம், 1:00 மணிக்கு, திருப்போரூர் தாசில்தார் வந்தார். அவரிடமும், அதே கோரிக்கையை பொதுமக்கள் தெரிவித்தனர்.அதற்கு தாசில்தார், 'கிணறு மற்றும் லாரி உரிமையாளர்களை தாலுகா அலுவலகத்திற்கு அழைக்கிறேன்; நீங்களும் வாருங்கள். அங்கு பேசி, தீர்வுக்கான நடவடிக்கை எடுக்கலாம்' என, கூறினார்.
இதையடுத்து, மறியலை கைவிட்டு, அனைவரும் கலைந்தனர்.சிறைபிடிக்கப்பட்ட டேங்கர் லாரி தண்ணீரை, பொதுமக்களுக்கு வினியோகித்த பின், லாரியை பறிமுதல் செய்து, தாலுகா அலுவலகத்திற்கு, போலீசார் ஓட்டிச் சென்றனர்.இந்த போராட்டதால், இச்சாலையில், நான்கு மணி நேரம், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X