பொது செய்தி

தமிழ்நாடு

காண்டாமிருக வண்டால் காலியாகும் தென்னை! பூஞ்சானத்தால் கட்டுப்படுத்த 'அட்வைஸ்'

Added : ஜூலை 11, 2019
Advertisement

ஆனைமலை:தென்னை மரங்களில், அதிக சேதம் ஏற்படுத்தும் காண்டாமிருக வண்டுகளை கட்டுப்படுத்த, வேளாண்துறையினர் அறிவுரை வழங்கி உள்ளனர்.ஆனைமலை ஒன்றியத்தில், 57 ஆயிரம் ஏக்கரில், 40 லட்சத்துக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் உள்ளன. மழைக்காலத்தில் அதிகளவில் பரவும், காண்டாமிருக வண்டினால் தென்னையில், கணிசமான அளவு மகசூல் பாதிக்கிறது.
வேளாண்துறையினர் கூறியதாவது:காண்டாமிருக வண்டுகளின் வளர்ச்சி நிலை நான்கு பருவங்களாக உள்ளன. மழைக்காலங்களில் தோப்பில் மாட்டு சாணம் போடப்படும் எருக்குழி, தோப்பில் போடப்பட்ட மக்கிய உரத்தின் அடியில், ஐந்து முதல் 15 செ.மீ., ஆழம் வரையில் சென்று, காண்டாமிருக வண்டுகள் முட்டைகளிடும். முட்டை புழுவாகும் அதன்பின், கூட்டுப்புழுவாக உருவாகும்.மழைக்காலத்தில் தான் காண்டாமிருக வண்டுகள், கூட்டுப்புழு பருவத்தில் இருந்து வண்டுகளாக வெளியேறும். மழைக்காலம் முடிவதற்குள் மீண்டும் முட்டைகளிடும். ஒரு பெண் காண்டாமிருக வண்டு, 150 முட்டைகள் வரையில் இடும்.காண்டாமிருக வண்டுகள் தென்னை மரங்களின் இளம் குருத்துப்பகுதிகளை துளையிட்டு உள்ளே சென்று, மொட்டுப்பகுதியை சாப்பிடும். இதனால், குருத்துப்பகுதி விரியும் போது, தென்னை மட்டை முக்கோண வடிவத்தில் கத்தரித்தது போல இருக்கும். இதனால், 15 சதவீதம் வரையில் மகசூல் குறையும். மேலும், காண்டாமிருக வண்டுகள் தாக்கிய இடங்களில், பூஞ்சானம் பிடித்து, குருத்தழுகல் நோய் ஏற்படும். மேலும், அப்பகுதியில் உள்ள வாசனைக்கு கவரப்பட்டு, சிகப்பு கூன் வண்டுகள் வரும். சிகப்பு கூன் வண்டுகள் தாக்கினால், மகசூல் இழந்து மரம் மரணிக்கும்.காண்டாமிருக வண்டுகளை கட்டுப்படுத்த, 'மெட்டாரைசியம் அனிசோபிலியே' என்ற பூஞ்சானம் உதவுகிறது. தற்போது, 250 கிலோ ஆனைமலை வேளாண் அலுவலகத்தில் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது.
ஒரு கிலோவின் விலை, 135 ரூபாயாகும். இந்த பூஞ்சானத்தை எருக்குழியில் கலந்து விட்டால், இவை காண்டாமிருக வண்டுகளை தாக்கி அழிக்கும்.அதேபோல், தோப்பில் நோய் தாக்குதலால் கருகிய மரங்களையும், இடி தாக்கிய மரங்களையும் வெட்டி அகற்ற வேண்டும். இரவு நேரங்களில் ஏக்கருக்கு, ஒரு விளக்குப்பொறி வைக்க வேண்டும்.
ஒரு கிலோ ஆமணக்கு புண்ணாக்கை, ஐந்து லிட்டர் நீரில் பானையில் கரைத்து ஏக்கருக்கு, ஐந்து வைக்க வேண்டும். ஆமணக்கு வாசனைக்கு கவரப்பட்டு பானையில் விழும். 15 நாட்களுக்கு ஒருமுறை பானையில் ஆமணக்கு மாற்ற வேண்டும்.காண்டாமிருக வண்டுகளை கட்டுப்படுத்த விவசாயிகள் ஆனைமலை வேளாண் அலுவலகத்துக்கு வந்து, 'மெட்டாரைசியம் அனிசோபிலியே' பூஞ்சானத்தை விலைக்கு வாங்கி பயன்படுத்தலாம். இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X