அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
சொல்லாததையும் செய்கிறோம்
ஸ்டாலினுக்கு பழனிசாமி பதிலடி

சென்னை: ''நாங்கள் சொல்வதை செய்வோம்; சொல்லாததையும் செய்கிறோம்,'' என, முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

EPS,பழனிசாமி,ஸ்டாலின்,dmk,admk


சட்டசபையில், நேற்று நடந்த விவாதம்:


தி.மு.க., - கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்: முதலில் நடந்த, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், தகவல் தொழில்நுட்ப துறையில் செய்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், 50 சதவீதம் கூட, முதலீடுகள் வரவில்லை. இரண்டாவது சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில், 3 லட்சம் கோடி ரூபாய்க்கு, ஒப்பந்தங்கள் போடப்பட்டன; அதில், எத்தனை தொழிற்சாலைகள் வந்துள்ளன? அடுத்து, மூன்றாவது மாநாடு நடத்தப் போவதாக அறிவித்து உள்ளீர்கள். இரண்டு மாநாட்டு ஒப்பந்தப்படி, தொழிற்சாலைகள் வராத நிலையில், மூன்றாவது மாநாடு எதற்கு?

அமைச்சர் தங்கமணி: முதல் சர்வதேச முதலீட்டாளர் மாநாடு, 2015ல் நடத்தப்பட்டது. அப்போது, 2.42 லட்சம் கோடி ரூபாய்க்கு, ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதில், 60 ஆயிரம் கோடிக்கு, முதலீடுகள் வந்துள்ளன.

மின் துறையில், 1.07 லட்சம் கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போடப்பட்டது.

தற்போது, தமிழகம் மின் மிகை மாநிலமாக உள்ளது. எனவே, 'டெண்டர்' முறையில், குறைந்த விலைக்கு யார் மின்சாரம் தருகின்றனரோ, அவர்களிடமே கொள்முதல் செய்யப்படும் என, அறிவித்தோம். இதனால், மின் துறையில், முதலீடு செய்ய முன்வரவில்லை. முதலீட்டாளர் மாநாட்டு ஒப்பந்தப்படி, 50 சதவீதம் முதலீடு வந்தாலே, மிகப்பெரிய வெற்றி. மின்துறை முதலீட்டை கழித்து விட்டால், 60 சதவீதம் முதலீடு வந்துள்ளது. மேலும், முதலீடு செய்ய, ஏழு ஆண்டுகள் அவகாசம் உள்ளது.

அமைச்சர் மணிகண்டன்: முதல் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில், 10 ஆயிரத்து, 958 கோடி ரூபாய்க்கு, 17 நிறுவனங்கள், ஒப்பந்தம் செய்தன. இதில், 13 நிறுவனங்கள், பணியை துவக்கி உள்ளன.

தி.மு.க., - ராமச்சந்திரன்: தகவல் தொழில்நுட்ப துறையில், 5,455 கோடி ரூபாய் முதலீடு மட்டுமே வந்துள்ளது.

அமைச்சர், எம்.சி.சம்பத்: இன்னும் நான்கு ஆண்டுகள் உள்ளன. அதற்குள், ஒப்பந்தம் செய்த நிறுவனங்கள், தொழில் துவங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின்: நேற்று, அமைச்சர் ஜெயகுமார், 'வரும், ஆனால் வராது' என, கூறியது போலத்தான் நடக்கும்.

Advertisement

முதல்வர்: நாங்கள் சொல்வதை செய்வோம்; சொல்லாததையும் செய்து கொண்டிருக்கிறோம். இரண்டாவது, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், 3 லட்சம் கோடி ரூபாய்க்கு, 304 ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய தொழில் வருவதற்காக, முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி வருகிறோம். முதல் மாநாட்டில் செய்த ஒப்பந்தம் நிறைவேறிய பின் தான், அடுத்த மாநாடு நடத்த வேண்டும் என்றால், அது நடக்காது. மாநாடு நடத்தும் போது, முதலீட்டாளர்கள், தொழில் துவங்க உகந்த மாநிலத்தை தேர்வு செய்து வருவர். இந்தியாவை பொறுத்தவரை, தொழில் முதலீடு செய்வதற்கு உகந்த மாநிலமாக, தமிழகம் உள்ளது.

கிராமத்தில் இருப்போருக்கும், வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்பதற்காக, புதிய தொழிற்சாலைகள் உருவாக, தேவையான மானியம் வழங்குகிறோம். சிறு தொழிலை ஊக்குவிக்க, அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என, வாக்குறுதி அளித்ததால், முதலீட்டாளர்கள், ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இவ்வாறு, விவாதம் நடந்தது.


Advertisement

வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
12-ஜூலை-201922:41:01 IST Report Abuse

தமிழ் மைந்தன்ஒரு காமெடியருக்கு சொல்லும் பதிலைகூட .....பத்திரிக்கைகள் பதிலடி என போடுகிறார்களே......

Rate this:
Arachi - Chennai,இந்தியா
12-ஜூலை-201920:00:40 IST Report Abuse

Arachiசொல்லாமல் செஞ்சது எத்தனை என்பது ஆட்சியை விட்டு போனதிற்குப்பிறகு தான் வெளிவரும்

Rate this:
Nalam Virumbi - Chennai,இந்தியா
12-ஜூலை-201916:27:28 IST Report Abuse

Nalam Virumbiஎடப்பாடியாரே எல்லாம் செய்யுங்கள், நாங்கள் அனுபவித்து, தி மு க வுக்கு ஓட்டுப் போடுவோம்.

Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X