பொது செய்தி

தமிழ்நாடு

கால்நடை வளர்ப்புக்கு உதவும் அகத்தி : தெளிப்பு நீர் பாசனத்தில் அமோகம்

Added : ஜூலை 11, 2019
Advertisement
 கால்நடை வளர்ப்புக்கு உதவும் அகத்தி : தெளிப்பு நீர் பாசனத்தில் அமோகம்

பொள்ளாச்சி;கால்நடை தீவனத்துக்காக தெளிப்பு நீர் பாசனம் அமைத்து, விளைநிலத்தில், அகத்தி சாகுபடி செய்யப்படுகிறது.நெகமம் அடுத்த செல்லப்பகவுண்டனுாரை சேர்ந்த கவுரிசங்கர், தென்னை சாகுபடியில் ஊடுபயிராக, அரை ஏக்கர் பரப்பளவில் அகத்திக்கீரை சாகுபடி மேற்கொண்டுள்ளார். இச்சாகுபடிக்கு தெளிப்பு நீர் பாசனம் அமைக்கப்பட்டுள்ளது. அகத்தி செடிகளுக்கு அளிக்கப்படும் பாசனமே, தென்னைகளுக்கும் போதுமானதாக இருக்கிறது.
அவர் மேலும் கூறியதாவது: பண்ணையில் தலைச்சேரி ஆடுகள், குஜராத் மாநிலத்தை சேர்ந்த காங்ரீச், கிர் வகை கால்நடைகளுக்கு, புரோட்டின் அதிகமுள்ள உணவாக கொடுக்கப்படுகிறது.தவிர, அசில் ரக சண்டை கோழிகளும், அகத்தியை தீவனமாக எடுத்துக்கொள்கிறது, இவற்றை ஈரோடு பகுதியை சேர்ந்தவர்கள் மற்றும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள் வாங்கிச்செல்கின்றனர்.மற்ற நேரங்களில் கோழிகளுக்கு உணவாக கம்பு வழங்குகிறோம்.
அகத்திக்கீரை சாகுபடி மண்ணுக்கு, நாள்தோறும் தொழு உரம் வீசப்படுகிறது. வேகமாக வளரும் செடிகளில் இருந்து கிடைக்கும் அகத்திக்கீரை, கால்நடைகளுக்கு மட்டுமன்றி, வெளியாட்களுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.அகத்தி சாகுபடியில் ஊடுபயிராக வேலிமசாலும் வளர்க்கப்படுகிறது. இதுவும் கால்நடைகளுக்கு ஊட்டமிக்க உணவாக பயன்படுகிறது. அகத்தி மற்றும் வேலி மசால் சாகுபடி மண்ணில், களைச்செடிகள் வளர்வதில்லை. அதனால், பராமரிப்பு செலவும் மிச்சமாகிறது. இவ்வாறு, கவுரிசங்கர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X