சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாலை விபத்தில் இருவர் பலி

Added : ஜூலை 11, 2019
Advertisement

செங்கல்பட்டு:செங்கல்பட்டு அருகே நடந்த சாலை விபத்துகளில், மூதாட்டி உட்பட இருவர் இறந்தனர்.
செங்கல்பட்டு அடுத்த, இருங்குன்றபள்ளியைச் சேர்ந்த சுப்ரமணி மனைவி கிளியம்மாள், 80. இவர், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில், வேலை செய்துவிட்டு, நேற்று முன்தினம், தேசிய நெடுஞ்சாலையை கடந்தார்.அப்போது, சென்னையிலிருந்து மதுராந்தகம் சென்ற டேங்கர் லாரி, கிளியம்மாள் மீது மோதியதில் காயமடைந்தார்.செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், கிளியம்மாள் இறந்தார்.திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த செல்வகுமார், 50; கூட்டுறவு பண்டகசாலை மேலாளர்.இவரும், திருக்கழுக்குன்றம் ராஜபாளையம் தெருவைச் சேர்ந்த முனியன், 60, என்பவரும், காஞ்சிபுரத்தில் இருந்து திருக்கழுக்குன்றத்திற்கு, டி.வி.எஸ்., நிறுவன இரு சக்கர வாகனத்தில், நேற்று முன்தினம் சென்றனர்.
செங்கல்பட்டு அடுத்த, திம்மாவரம் அருகே, எதிரே வந்த வாகனத்தின் மீது, மோதாமல் இருக்க, 'பிரேக்' போட்டார். வாகனம் தடுமாறி விழுந்ததில், இருவரும் காயமடைந்தனர்.செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், சிகிச்சை பலனின்றி, முனியன் இறந்தார். செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X