பொது செய்தி

தமிழ்நாடு

ஊட்டச்சத்து மிக்க தானிய உற்பத்தி: விவசாயிகளுக்கு பயிற்சி

Added : ஜூலை 12, 2019
Advertisement

உடுமலை:உடுமலை அருகே, ஊட்டச்சத்து மிக்க தானியங்கள் பயிர் சாகுபடி தொழில்நுட்ப பயிற்சி முகாம் நடந்தது.உடுமலை, கண்ணமநாயக்கனுாரில், தேசிய உணவு பாதுகாப்புத்திட்டம், ஊட்டச்சத்து மிக்க தானியங்கள் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு காரீப் பருவ பயிர் சாகுபடி, முதல் கட்ட தொழில் நுட்ப பயிற்சி முகாம் நேற்று நடந்தது.
தேசிய உணவு பாதுகாப்புத்திட்ட ஆலோசகர் மாரியப்பன், தானியங்களின் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில், குறைந்த நீர்த்தேவை உள்ள ஊட்டச்சத்து மிக்க தானியங்களான, சோளம், கம்பு, ராகி சாகுபடிகளை மேற்கொள்ளலாம்.தானிய வகை உணவு, உடல் நலனுக்கு ஏற்றது. விளைவிக்கப்படும் தானியங்களுக்கும் நல்ல விலை கிடைக்கிறது.குறுகிய கால தானியம் மற்றும் தட்டு மகசூல் தரும், கோ (எஸ்) ரக சோளம், தானிய நுண்ணுாட்டம், திரவ உயிர் உரங்கள் குறித்தும், மத்திய, மாநில அரசுகள் வழங்கும் மானியங்கள்.தேசிய உணவு பாதுகாப்புத்திட்டத்தின் கீழ், பயறு வகை, தானியம், எண்ணை வித்து பயிர்கள், மர எண்ணை வித்து பயிர்கள் மற்றும் எண்ணை பனைத்திட்டங்கள், வழங்கப்படும் மானியங்கள் குறித்தும் விளக்கினார்.கூட்டத்தில், கோடை உழவு செய்வதால், படைப்புழு உள்ளிட்ட பூச்சி மற்றும் நோய்த்தாக்குதல் பாதிப்புகள் தடுக்கப்படுகிறது.
பெய்யும் மழை நீர் முழுவதும் பூமிக்குள் இறங்கி, நிலத்தடி நீர் மட்டம் உயரும்.விவசாயிகள் பயிர்க்காப்பீடு செய்ய வேண்டியதன் அவசியம், இ- அடங்கலில் சாகுபடி செய்த பயிர்கள் பதிவு செய்தல், ஒரு ஏக்கர் சாகுபடி செய்யும் இடத்தில், மூன்று ஏக்கர் சாகுபடி செய்யும் வகையில் களைகள் கட்டுப்படுத்துதல், உரம் மற்றும் நீர்ப்பாசன செலவினங்கள் குறைத்தல், குறைந்த நீரில் அதிக பரப்பளவு சாகுபடி செய்ய சொட்டு நீர் பாசனம் செய்ய வேண்டும், என விளக்கப்பட்டது.இதில், உடுமலை வேளாண் உதவி அலுவலர் முருகானந்தம், தொழில் நுட்ப உதவியாளர் லாவண்யா, அட்மா மேலாளர் செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X