பொது செய்தி

தமிழ்நாடு

மடத்துக்குளத்தில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்

Added : ஜூலை 12, 2019
Advertisement

மடத்துக்குளம்:விவசாயிகள் லாபம் பெறவும், ஏற்றுமதி வாய்ப்பை உருவாக்கவும், மடத்துக்குளத்தில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் அமைய, தீவிர நடவடிக்கையில் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.மடத்துக்குளம் தாலுகா பகுதியிலுள்ள கிராமங்களில், 20 விவசாயிகளை உறுப்பினராக்கி, உழவர் ஆர்வலர் குழு உருவாக்கப்படுகிறது. ஐந்து குழுவைச்சேர்த்து, ஒரு உழவர் உற்பத்தியாளர் குழுவாக்குகின்றனர்.
இதிலுள்ள உறுப்பினர் எண்ணிக்கை, 100 இருக்கும். அருகிலுள்ள கிராம உழவர் உற்பத்தியாளர் குழுக்கள், 10 இணைத்து, ஆயிரம் விவசாயிகள் கொண்ட அமைப்பாக்கி, இதை, 'உழவர் உற்பத்தியாளர் நிறுவனமாக' மாற்றுகின்றனர். இந்த நிறுவனம், கம்பெனி சட்டப்படி முறையாக பதிவு செய்யப்பட்டு, வங்கிக்கணக்கும் தொடங்கப்படுகிறது. பின்பு, இதிலுள்ள விவசாயிகள் ஒவ்வொரு நபரும், ஆயிரம் ரூபாய் வீதம் பங்களித்து, நிறுவனம் சார்பில், 10 லட்சம் ரூபாயை வங்கியில் செலுத்தி இருப்பு வைக்கின்றனர்.இந்த தொகையை ஆதாரமாக வைத்து, அரசு இந்த நிறுவனத்துக்கு தனது பங்களிப்பாக, 10 லட்சம் ரூபாய் கொடுக்கிறது. இந்த, 20 லட்சம் ரூபாயைக்கொண்டு, விவசாயம் சார்ந்த தொழிலில் ஈடுபடலாம். இதற்கு முழுக்க வரிவிலக்கு வழங்கப்படுகிறது. முக்கியமாக ஏற்றுமதி தொழில் செய்யலாம். இதில் கிடைக்கும் லாபம் விவசாயி கணக்கில் சேர்க்கப்படும். கடந்த, 2017-18ம் ஆண்டு, வேடபட்டி, பாப்பான்குளம், மற்றும் துங்காவியிலும், 2018ம் ஆண்டு கொமரலிங்கம், மெட்ராத்தியிலும் உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து, மடத்துக்குளத்தில் மூன்று, குடிமங்கலத்தில் மூன்று, உடுமலையில் நான்கு உழவர் உற்பத்தியாளர் குழுக்களை இணைத்து, 'உழவர் உற்பத்தியாளர் நிறுவனம்' அமைக்கப்பட்டுள்ளது.தற்போது, இந்தியா முழுவதும் 500 நிறுவனங்கள் இதுபோல செயல்படுகின்றன. இதுகுறித்து வேளாண்மைத்துறையினர் கூறுகையில் 'விவசாயிகள் பயன்பெறும் வகையில், மடத்துக்குளம் பகுதியில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளோம்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X