பதிவு செய்த நாள் :
சொத்து பறிமுதல்:
மல்லையா கோரிக்கை நிராகரிப்பு

மும்பை: வங்கி கடன் மோசடி வழக்கில் தனது சொத்துகளை பறிமுதல் செய்ய தடை விதிக்க வேண்டும் என கோரி விஜய் மல்லையா தாக்கல் செய்த மனுவை மும்பை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சொத்து,பறிமுதல்,மல்லையா,கோரிக்கை,நிராகரிப்பு


நாட்டின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவராக இருந்த விஜய் மல்லையா 63 வங்கிகளில் 9000 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாமல் ஐரோப்பிய நாடான பிரிட்டனில் பதுங்கியுள்ளார். மல்லையாவின் சொத்துகளை பறிமுதல்

செய்யும் நடவடிக்கையில் அமலாக்கத்துறை ஈடுபட்டுள்ளது.

பொருளாதார குற்றவாளி என அறிவிக்கப்பட்டதை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் மல்லையா மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீது விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையில் மும்பை உயர் நீதிமன்றத்தில் கடந்த மாதம் மல்லையா சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில் மல்லையா 'என்னை பொருளாதார குற்றவாளி என சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளதை எதிர்த்து நான் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை முடியும் வரை என் மீதான வழக்குகளை விசாரிக்கவோ உத்தரவுகள் பிறப்பிக்கவோ சிறப்பு நீதிமன்றத்துக்கு தடை விதிக்க வேண்டும். 'என் சொத்துகளை பறிமுதல் செய்யவும் தடை விதிக்க வேண்டும்' என கூறியிருந்தார்.

Advertisement


இந்த மனு நீதிபதிகள் அகில் குரேஷி கதாவாலா ஆகியோர் அடங்கு அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் கூறியதாவது: வழக்கு விசாரணைக்கும் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கும் தடை செய்ய கோரியுள்ள மல்லையா அதற்கான காரணம் எதையும் தெரிவிக்கவில்லை. தடை செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. அதனால் அவரது மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.


Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
KMP - SIVAKASI ,இந்தியா
12-ஜூலை-201910:15:36 IST Report Abuse

KMPகடன் கொடுத்த அந்த வங்கிகளின் மேலாளர்களை உடனே வேலையே விட்டு வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.

Rate this:
blocked user - blocked,மயோட்
12-ஜூலை-201904:36:11 IST Report Abuse

blocked userகடன் கொடுக்க தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய முன்னாள் காங்கிரஸ் நிதி அமைச்சரையும் சேர்த்துவிட வேண்டும்.

Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
12-ஜூலை-201923:25:52 IST Report Abuse

தமிழ்வேல் கரெக்ட்... வாரகடனாளிகளின் லிஸ்டை வெளியிடாமல் (இதுவரையில்) வெளிநாட்டுக்கு தப்பியோட உதவி செய்தவர்களையும் இதில் சேர்க்கவேண்டும். ...

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X