ஜனநாயகத்துக்கு இழுக்கு

Added : ஜூலை 12, 2019
Share
Advertisement
 ஜனநாயகத்துக்கு இழுக்கு

ஜனநாயகத்துக்கு இழுக்கு


பணபலம் மற்றும் மின்னணு ஓட்டு இயந்திரங்கள் முறைகேட்டால், மத்தியில் மீண்டும் ஆட்சியை, பா.ஜ., கைப்பற்றியது. இப்போது, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்கிறது. பா.ஜ.,வின் இந்தச் செயல், ஜனநாயகத்துக்கே இழுக்கு. மக்கள் தீர்ப்பை அவமதிக்கும் செயல். கட்சி மாறும், மக்கள் பிரதிநிதிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாயாவதிதலைவர், பகுஜன் சமாஜ்.
பொருளாதாரத்தை பாதிக்கும்

கர்நாடகா மற்றும் கோவாவில், பா.ஜ.,வின் செயல்பாடுகள், ஜனநாயகத்தை கேவலப்படுத்தி உள்ளன. அந்த மாநிலங்களில் ஏற்பட்டுள்ள நிலைமை, தங்கள் அரசியல் இலக்கை அடைய, பா.ஜ.,வுக்கு சாதகமாக இருக்கலாம். ஆனால், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும். இதை உணர்ந்து, மத்திய அரசு செயல்பட வேண்டும்.
சிதம்பரம், முன்னாள் மத்திய அமைச்சர், காங்.,
பேச்சு மூலம் தீர்வு

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பிரச்னையாக, காஷ்மீர் உள்ளது. இதற்கு பேச்சு மூலம் தான், சுமூக தீர்வு காண வேண்டும். ராணுவ நடவடிக்கையால், எந்த தீர்வும் காண முடியாது,. இதை உணர்ந்து, இந்தியாவும், பாகிஸ்தானும் செயல்பட வேண்டும். எல்லையில், அமைதி ஏற்படுத்த, இரு நாடுகளும் பேச்சில் ஈடுபட வேண்டும்.

பரூக் அப்துல்லாதலைவர்,

தேசிய மாநாட்டு கட்சி

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X