புளியந்தோப்பு:சென்னையில், 16 வயது சிறுமியை, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய, மூன்று பெண்கள், 'போக்சோ' சட்டத்தில் கைதுசெய்யப்பட்டனர்.
புளியந்தோப்பு காவல் நிலையத்தில், 7ம் தேதி, பெண் ஒருவர் அளித்த புகாரில், 'என், 16 வயது மகள், 3ம் தேதி மாலை, 5:30 மணியில் இருந்து காணவில்லை. அவரை கண்டுபிடித்து தர வேண்டும்' என, கூறி இருந்தார்.புளியந்தோப்பு போலீசார், சிறுமியை தேடினர். இந்நிலையில், 9ம் தேதி வீடு திரும்பிய சிறுமி, தான் விபசார கும்பலிடம் சிக்கியதாகவும், தனக்கு பாலியல் கொடுமைகள் நேர்ந்ததாகவும், சகோதரியிடம் கூறியுள்ளார்.
புகார்
அதிர்ச்சியடைந்த சிறுமி யின் குடும்பத்தினர், புளியந்தோப்பு போலீசாரிடம், விபரத்தை தெரிவித்தனர். போலீசார் நடத்திய, தொடர் விசாரணையில், பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன.வீட்டைவிட்டு வெளியேறிய சிறுமியை, வியாசர்பாடியைச் சேர்ந்த ஜபினா, 30, என்பவர், ஆசைவார்த்தை கூறி, அழைத்து சென்றுள்ளார்.புளியந்தோப்பை சேர்ந்த, முபினா பேகம், 37, என்பவருடன் சேர்ந்து, புரசைவாக்கம், முத்து தெருவில், விபசார தொழில் நடத்தி வரும், நிஷா, 36, என்பவர் வீட்டில், சிறுமியை தங்க வைத்து உள்ளனர்.அந்த வீட்டில் அடைத்து வைத்து, சிறுமியை, விபசாரத்தில் ஈடுபடுத்தி உள்ளனர். ஐந்து ஆண்கள் மூலம், சிறுமி சீரழிக்கப்பட்டுள்ளார்.ஜபினா, முபினா, நிஷா ஆகிய மூவரையும், போலீசார் பாலியல் கொடுமைகளில் இருந்து சிறார்களை பாதுகாக்கும், 'போக்சோ' சட்டத்தின் கீழ், நேற்று கைது செய்து, சிறையில் அடைத்தனர்.கைதுசிறுமியை சீரழித்த, ஐந்து ஆண்கள் குறித்து விசாரிக்கின்றனர். விரைவில், அவர்கள் கைது செய்யப்படுவர் என, போலீசார் தெரிவித்தனர்.இந்நிலையில், நிஷாவின் கணவர், ரமேஷ், சூதாட்டம் நடத்தியதாக, ஏப்ரல் மாதம், வேப்பேரி போலீசாரால் கைது செய்யப்பட்டார்.அப்போது, வீட்டில் விபசார தொழில் நடத்துவதாகவும், போலீசார் பலர், தங்களிடம் வாடிக்கையாளராக உள்ளதாகவும், வாக்குமூலம் அளித்திருந்தார்.இது தொடர்பாக, மேல் விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்காததால், நிஷா, தொடர்ந்து விபசார தொழில் நடத்தி, தற்போது, 16 வயது சிறுமி வாழ்க்கையை சீரழித்து உள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE