சமூக சேவகர் கொலை வழக்கு :முன்னாள் எம்.பி.,க்கு ஆயுள் தண்டனை

Updated : ஜூலை 12, 2019 | Added : ஜூலை 12, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 சமூக சேவகர் கொலை வழக்கு :முன்னாள் எம்.பி.,க்கு ஆயுள் தண்டனை

ஆமதாபாத்:வழக்கறிஞரும், சமூக சேவகருமான அமித் ஜேத்வா கொலை வழக்கில், குஜராத்தை சேர்ந்த, முன்னாள், பா.ஜ., - எம்.பி.,யான டினு சோலங்கி உட்பட, ஏழு பேருக்கு ஆயுள் தண்டனையும், 15 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில், முதல்வர், விஜய் ரூபானி தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. ஆமதாபாதைச் சேர்ந்த, வழக்கறிஞரும், ஆர்.டி.ஐ., எனப்படும், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பொது நலன் வழக்குகள் தொடர்ந்த, சமூக ஆர்வலருமான, அமித் ஜேத்வா, 2010ல், நீதிமன்ற வளாகத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
விசாரணை
குஜராத்தின் கிர் பகுதி யில் உள்ள உயிரியல் பூங்காவில், சட்டவிரோதமாக, மணல் அள்ளப்படுவது குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெற்ற தகவலின் அடிப்படையில், அமித் ஜேத்வா வழக்கு தொடர்ந்தார். கடந்த, 2009 - 2014ல், எம்.பி.,யாக இருந்த பா.ஜ.,வைச் சேர்ந்த டினு சோலங்கிக்கு எதிராக அவர் வழக்கு தொடர்ந்தார்.இந்நிலையில், 2010ல், குஜராத் உயர் நீதிமன்றத்தில், மர்ம நபர்களால், அமித் ஜேத்வா சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்த வழக்கில், ஆமதாபாத் குற்றப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். 'அமித் ஜேத்வா சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், எம்.பி.,யாக இருந்த டினு சோலங்கிக்கு தொடர்பில்லை' என, போலீஸ் தரப்பில் அப்போது தெரிவிக்கப்பட்டது. இதில் திருப்தி அடையாத, உயர் நீதிமன்றம், 2013ல், சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்டது. டினு சோலங்கி, அவருடைய உறவினர் ஷிவா சோலங்கி உள்பட, ஏழு பேர் மீது, சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்தது.
இந்த வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்த, 195 பேரில், 105 பேர் பிறழ் சாட்சியாக மாறினர். இதையடுத்து, வழக்கை மீண்டும் விசாரிக்கக் கோரி, அமித் ஜேத்வாவின் தந்தை, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை மீண்டும் விசாரிக்க, உயர் நீதிமன்றம், 2017ல் உத்தரவிட்டது.


தீர்ப்பு

இந்த வழக்கை, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் விசாரித்து, டினு சோலங்கி உட்பட, ஏழு பேரும், குற்றவாளிகள்' என, கடந்த வாரம் தீர்ப்பு அளித்தது. இவர்களுக்கான தண்டனை விபரம் நேற்று அறிவிக்கப்பட்டது.அதன்படி, டினு சோலங்கி, அவருடைய உறவினரான ஷிவா சோலங்கி உட்பட, ஏழு பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், இவர்களுக்கு, 15 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இதில், 11 லட்சம் ரூபாயை, அமித் ஜேத்வாவின் குடும்பத்துக்கு அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.பிறழ் சாட்சியாக மாறிய, 105 பேர் மீது நடவடிக்கை எடுக்கவும், சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rafi - Riyadh,சவுதி அரேபியா
15-ஜூலை-201922:15:37 IST Report Abuse
Rafi குஜராத் காவல் துறை அரசியல்வாதிகளுக்காக செயல் பட்டு நீதிமன்றம் கண்டிக்கப்பட்ட நிகழ்வுகள் பலமுறை நடந்துள்ளது, அங்கு அரசியல் குறுக்கீடு அதிகமிருக்கு, அவர்களுக்கு ஆதரவாக பல கொலைகளும் அரங்கேற்றப்பட்டு, பல மறைக்கப்பட்டுவிட்ட நிகழ்வுகளும் இருக்கு. ஏகபோக இறைவனிடம் குற்றவாளிகள் தப்பிக்க முடியாது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X