பொது செய்தி

இந்தியா

கும்பலாக தாக்குதல் நடத்தினால் உ.பி.,யில் ஆயுள் தண்டனை

Added : ஜூலை 12, 2019
Advertisement

லக்னோ:கும்பலாக சென்று தாக்குதல் நடத்துவோர் மற்றும் பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் தாக்குதல் நடத்துவோருக்கு, ஆயுள் தண்டனை விதிக்கும்படி, உத்தர பிரதேச மாநில அரசுக்கு, அம்மாநில சட்ட கமிஷன் பரிந்துரை செய்துள்ளது.
உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, அப்பாவிகள் மீது, கும்பலாக சென்று சிலர் தாக்குதல் நடத்துவது அதிகரித்துள்ளது. இதில், உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.இதேபோல், பசு பாதுகாவலர்கள் என்ற பெயரிலும், அப்பாவிகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதை தடுக்க, மாநில அரசு, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.இதுபோன்று கும்பலாக தாக்குதல் நடத்துவோருக்கு, தற்போது அளிக்கப்படும் தண்டனை மிகவும் குறைவாக உள்ளதால், அதை அதிகரிக்க வேண்டும் என்ற, கோரிக்கையும் எழுந்தது.இதையடுத்து, மாநில சட்ட கமிஷன், இது தொடர்பாக ஒரு பரிந்துரையை தயார் செய்துள்ளது.
அதன்படி, கும்பலாக தாக்குதல் நடத்துவோருக்கு, ஏழு ஆண்டுகளில் இருந்து, அதிகபட்சமாக, ஆயுள் தண்டனை வரை விதிக்கும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், கும்பல் தாக்குதலால் பாதிக்கப்படுவோருக்கு, போதிய இழப்பீடு மற்றும் நிவாரணம் அளிக்க வேண்டும் என்றும், இதில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 'இது தொடர்பான மசோதா, விரைவில் சட்டசபையில் நிறைவேற்றப்படும்' என, உ.பி., மாநில அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X