சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விபத்து, பலி

Added : ஜூலை 12, 2019
Advertisement

லாரியில் சிக்கி மெக்கானிக் பலி
பள்ளிக்கரணை: சித்தாலப்பாக்கம், துர்கையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் இளையராஜா, 26; மெக்கானிக். இவர், நேற்று மாலை, நுாக்கம்பாளையத்தில் உள்ள, காலி மனை ஒன்றில், அ.தி.மு.க., பிரமுகருக்கு சொந்தமான லாரியை, பழுது பார்த்துக் கொண்டிருந்தார்.மேடான பகுதியில் நின்றிருந்த லாரி, திடீரென உருண்டது. அப்போது, லாரிக்கு அடியில் படுத்து, வேலை பார்த்துக் கொண்டிருந்த இளையராஜா, சக்கரத்தில் சிக்கி, சம்பவ இடத்திலேயே இறந்தார். பள்ளிக்கரணை போலீசார் விசாரிக்கின்றனர்.
கல்லுாரி மாணவர் உயிரிழப்பு
தாம்பரம்: ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சி மடத்தைச் சேர்ந்தவர், முகமது கான், 53. இவரது மகன் முகமது ஷெரிப், 22; சென்னையில், தனியார் பொறியியல் கல்லுாரியில், இறுதியாண்டு படித்து வந்தார். நேற்று மதியம், அதே கல்லுாரியில், இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவரான, முகமது அகில், 20 என்பவருடன், தன், 'யமஹா எப்.இசட்' இருசக்கர வாகனத்தில்,தாம்பரம் -- மதுரவாயல் புறவழிச் சாலையில், தாம்பரம் நோக்கி வந்தார். இருவரும், 'ஹெல்மெட்' அணியவில்லை.கடப்பேரி அருகே வந்தபோது, அவர்களின் இருசக்கர வாகனம், கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர தடுப்பில் மோதியது. இருவரும், 50 அடி துாரம் வரை இழுத்துச் செல்லப்பட்டதில், முகமது ஷெரிப், சம்பவ இடத்திலேயே பலியானார்; முகமது அகில், காயங்களுடன் தப்பினார். குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.
ரயில் மோதி மூதாட்டி மரணம்
திருவொற்றியூர்: திருவொற்றியூர், பாலகிருஷ்ணா நகர், கம்பர் தெருவைச் சேர்ந்தவர், ரோஸ்பாய், 73. இவர், நேற்று மதியம், மருத்துவமனைக்கு சென்று, வீடு திரும்பினார். அண்ணாமலை நகர் ரயில்வே கேட் அருகே, தண்டவாளத்தை கடக்க முற்பட்ட போது, சென்ட்ரலில் இருந்து, வாரணாசி சென்ற விரைவு ரயில் மோதி, சம்பவ இடத்திலேயே பலியானார். கொருக்குபேட்டை ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X