காதல் கல்யாணம் எதிரொலி பா.ஜ., - எம்.எல்.ஏ., மகள் பரபரப்பு புகார்

Added : ஜூலை 12, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
 காதல் கல்யாணம் எதிரொலி  பா.ஜ., - எம்.எல்.ஏ., மகள் பரபரப்பு புகார்

புதுடில்லி:''வேற்று சமூகத்தை சேர்ந்த நபரை காதலித்து, திருமணம் செய்து கொண்டதால், உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.''போலீசார் எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்,'' என, உத்தர பிரதேச, பா.ஜ., - எம்.எல்.ஏ., ராஜேஷ் மிஸ்ரா மகள் பேசியுள்ள, 'வீடியோ' பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தில் உள்ள, பரேய்லி தொகுதியை சேர்ந்த, பா.ஜ., - எம்.எல்.ஏ., ராஜேஷ் மிஸ்ரா. இவரது மகள், சாக் ஷி மிஸ்ரா, 23.இவர், அஜிதேஷ் குமார், 29, என்ற நபரை காதலித்தார். இவர் வேற்று சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், இந்த காதலுக்கு, ராஜேஷ் மிஸ்ரா குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
எதிர்ப்பை மீறி, வீட்டை விட்டு வெளியேறி, அஜிதேஷ் குமாரை, சாக் ஷி சமீபத்தில் திருமணம் செய்தார். இந்நிலையில், சாக் ஷி மிஸ்ரா, தன் கணவருடன் சேர்ந்து, 'செல்பி' வீடியோ ஒன்றை நேற்று வெளியிட்டார்.பாதுகாப்புஅதில், அவர் கூறியிருப்பதாவது:
அப்பா மற்றும் அண்ணன் விக்கியிடம் ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன். எனக்கும், அஜிதேஷுக்கும் திருமணம் முடிந்துவிட்டது. எங்களை பிடிக்க, அடியாட்களை அனுப்புவதை நிறுத்துங்கள். நாங்கள் ஓடி ஓடி களைத்துவிட்டோம். அமைதியான வாழ்க்கை வாழ விரும்புகிறோம். நீங்கள் உங்கள் அரசியலை பாருங்கள்.இந்த, 'வீடியோ' மூலம் ஒன்றை கூற விரும்புகிறேன். வருங்காலத்தில், எனக்கோ, என் கணவருக்கோ, அவரது உறவினர்கள், உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், அதற்கு என் அப்பா தான் பொறுப்பு. எங்களுக்கு போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
மிரட்டல்

இந்த வீடியோ குறித்து, எம்.எல்.ஏ., ராஜேஷ் மிஸ்ரா, செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருமணம் குறித்து சொந்தமாக முடிவெடுக்கும் வயதை, என் மகள் எட்டிவிட்டார். அவரை யாரும் தடுக்க முடியாது. ஆனால், இருவருக்கும் வயது வித்தியாசம் அதிகமாக இருந்தது. மேலும், அவர் காதலித்தவரின் மாத வருமானம் மிகவும் குறைவாக இருந்தது. அதனால் தான் மறுத்தேன். மற்றபடி, கொலை மிரட்டல் விடுக்கவில்லை. இது எனக்கு எதிரான அரசியல் சதி.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
14-ஜூலை-201916:03:20 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> அப்பாவாக நீரேன்ன கோடீஸ்வர பரம்பறையா திருமணம் ஆயாக்ச்சி விடுங்கய்யா சம்பளம் கம்மியானாலும் அவா சமாளிச்சுப்பா படிச்சவா தானே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X