தாம்பரம்:இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட, 50 லட்சம் ரூபாய் மதிப்பு தங்கத்தை, சுங்கத்துறை அதிகாரிகள், நேற்று பறிமுதல் செய்தனர்.
இலங்கை தலைநகர் கொழும்புவிலிருந்து, 'ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்' விமானம், நேற்று முன்தினம் இரவு, 8:30 மணிக்கு, சென்னை வந்தது.அதில் வந்த, ராமநாதபுரத்தைச் சேர்ந்த, அகமது கபீர், 48, என்பவரை, சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அவரது, உடைமைகளுக்குள் இருந்து, 1.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 40 கிராம்தங்கம், 20 லேப்டாப்பறிமுதல் செய்யப்பட்டன.
மற்றொரு சம்பவத்தில், கொழும்புவிலிருந்து, நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு, 'ஸ்பைஸ் ஜெட்' விமானம், சென்னை வந்தது.அதில் வந்த, சென்னையைச் சேர்ந்த, மஹரூப், 39, மனோஜ் தாஸ், 28, மற்றும் ராமநாதபுரத்தைச் சேர்ந்த, கலந்தர் பக்ருதீன்,28, ஆகியோரை, சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது, 48.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 1.36 கிலோ எடையுள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.