எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தயார்!
புதுதாங்கல் ஏரியை சீரமைக்க பொதுநல சங்கங்கள்..
கலெக்டரின் அனுமதிக்காக காத்திருப்பு

அரசு துறைகளின் கட்டுமான திட்டங்களால், மூன்றில் ஒரு பங்காக சுருங்கிய, தாம்பரம் புதுதாங்கல் ஏரியை, வட கிழக்கு பருவ மழைக்கு முன், துார் வாரி சீரமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஏரி சீரமைப்புக்கு தயாராகி விட்ட தன்னார்வலர்கள், கலெக்டரின் அனுமதிக்காக காத்திருக்கின்றனர்.

புதுதாங்கல் ஏரியை சீரமைக்க பொதுநல சங்கங்கள் தயார்!


தாம்பரம் நகராட்சி பகுதியில், சென்னை புறவழிச் சாலையை ஒட்டி, புதுதாங்கல் ஏரி உள்ளது. ஏரியை பாதுகாக்க வேண்டிய அரசு துறைகளே, அதை, அடுத்தடுத்து கூறுபோட்டன.

மக்கள் குழு:


ஏரியின் நீர்பிடிப்பு பகுதிகளில், துணை மின் நிலையம், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், பூங்கா போன்றவை அமைக்கப்பட்டன. தனியாரும், தங்கள் பங்கிற்கு ஏரி பகுதியை ஆக்கிரமித்தன. இதனால், 70 ஏக்கராக இருந்த இந்த ஏரி, 25 ஏக்கராக சுருங்கி விட்டது. இந்த ஏரியில் ஆயக்கட்டு பகுதிகளாக இருந்த, 100 ஏக்கர் விவசாய நிலங்கள், தற்போது குடியிருப்புகளாக மாறிவிட்டன.

ஏரிக்கு நீர் வரும் வழிகள் தடைபட்டதால், மழைக் காலங்களில் பெரும் சிக்க லாகி விடுகிறது. 2015 நவ., - டிச., மாதங்களில், இங்குள்ள வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் எல்லாம் வெள்ளத்தில் மூழ்கின.பல ஆண்டுகளாக, ஏரியை பாதுகாக்க பொதுப்பணித் துறை நடவடிக்கை எடுக்காததால், கழிவுநீர் வடிகால் பகுதியாக, ஏரி மாறி விட்டது. தாம்பரம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்பாட்டில் இருந்தும், கழிவுநீர் கலப்பு தொடர்கிறது.

ஏரியை முறையாக பராமரிக்காததால், முற்றிலும் வறண்டு கிடக்கிறது. இப்பகுதியில், 300 அடி ஆழத்துக்கு, 'போர்வெல்' அமைத்தாலும், தண்ணீர் கிடைக்கவில்லை. ஏரி அருகே எப்போதும் இல்லாத அளவிற்கு, தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், 'களமிறங்குவோம்; நமக்கு நாமே...' என, பொது மக்களே, ஏரி பாதுகாப்பில் களமிறங்க தயாராகி உள்ளனர். இந்த ஏரியை சீரமைக்க, 38வது வார்டைச் சேர்ந்த, ஏழு பொதுநலச் சங்கங்கள் ஒன்றிணைந்து, 'புதுதாங்கல் ஏரி புனரமைப்பு குழு' என்ற பெயரில், புதிய அமைப்பை ஏற்படுத்தி உள்ளன. ஏரியை சீரமைக்க அனுமதி கோரி, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர், பொதுப்பணித் துறை அதிகாரிகளிடமும், கோரிக்கை மனு அளித்துள்ளன.

கைவிரிப்பு:


இது குறித்து, புதுதாங்கல் ஏரி புனரமைப்பு குழுவினர் கூறியதாவது: ஏரியில் கலந்த,

Advertisement

90 சதவீதம் கழிவுநீர், எங்கள் முயற்சியால் தடுத்து நிறுத்தப்பட்டது. தற்போது, 10 சதவீத கழிவுநீர் மட்டுமே கலந்து வருகிறது. இதையும், தடுக்கக் கோரி, நகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். மூன்று ஆண்டுகளாக, ஏரியை புனரமைக்கக் கோரி, மனு கொடுத்து வருகிறோம்; நிதியில்லை என, பொதுப்பணித் துறை அதிகாரிகள் கைவிரிக்கின்றனர்.

'கேர் எர்த்' என்ற தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து, ஏரியை துார் வாரி ஆழப்படுத்த, திட்டமிட்டுள்ளோம். இதற்கு அனுமதி கோரி, காஞ்சிபுரம் கலெக்டர் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளோம்.கலெக்டர் அனுமதி கொடுத்தால், பணிகளை விரைவில் துவக்குவோம். ஏரியை சீரமைத்தால், வரும் காலங்களில் தண்ணீர் பிரச்னையில் இருந்து, இப்பகுதி மக்கள் தப்புவர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

-- நமது நிருபர் -

Advertisement

வாசகர் கருத்து

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X