பொது செய்தி

இந்தியா

உடல் நலத்தை பேணுவதில் பிரதமர் மோடிக்கு முதலிடம்

Updated : ஜூலை 12, 2019 | Added : ஜூலை 12, 2019 | கருத்துகள் (48)
Advertisement
உடல் நலம் பேணுவதில் மோடி முதலிடம்

புதுடில்லி: உடல் நலத்தை பேணுவதில் மக்கள் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய 'டாப்' 30 இந்திய பிரபலங்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார்.அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த ஜி.ஓ.க்யூ.ஐ.ஐ. என்ற உடற்பயிற்சி நிறுவனம் உடல் நலத்தை அக்கறையுடன் பேணுவதில் மக்கள் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய 'டாப்' 100 இந்திய பிரபலங்களை சமீபத்தில் தேர்ந்தெடுத்தது.'பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், யூ டியூப் போன்ற சமூக ஊடகங்களில் இவர்களை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை மற்றும் கூகுள் இணையத்தில் இவர்களது உடற்பயிற்சி பழக்க வழக்கங்களை குறித்து வெளியான செய்திகளின் எண்ணிக்கை அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டது.




இதில் இருந்து 30 பெயர்கள் இறுதி செய்யப்பட்டு வெளியிடப்பட்டன. இதில் இரண்டாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார். இரண்டாம் இடத்தை 'பாலிவுட்' நடிகர் அக் ஷய் குமாரும், மூன்றாவது இடத்தை யோகா குரு பாபா ராம் தேவும் பிடித்துள்ளனர்.இவர்களை தவிர 'பாலிவுட்' நடிகர்கள் ரன்வீர் சிங், கரீனா கபூர், பிரியங்கா சோப்ரா, இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி ஆகியோர் 'டாப்' 10 பட்டியலில் இடம்பிடித்துள்ளனர்.இந்த பட்டியலில் 'டாடா சன்ஸ்' குழுமத்தின் தலைவரும் 'டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்' நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியும் செயல் இயக்குனருமான நடராஜன் சந்திரசேகரன் இடம்பிடித்துள்ளார். இந்த பட்டியலில் உள்ள ஒரே தமிழர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement




வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
12-ஜூலை-201916:08:33 IST Report Abuse
Endrum Indian சும்மா கண் போடாதீங்க அவரு மேலே. அவரு அவர் வேலையை மக்களுக்காக என்று ஒரு நாளில் குறைந்தது 18 மணி நேரம் என்று உழைக்கிறார்.
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
12-ஜூலை-201914:57:23 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் //இவர்களது உடற்பயிற்சி பழக்க வழக்கங்களை குறித்து வெளியான செய்திகளின் எண்ணிக்கை அடிப்படையில் இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டது//
Rate this:
Share this comment
Cancel
Snake Babu - Salem,இந்தியா
12-ஜூலை-201914:53:42 IST Report Abuse
Snake Babu //உள்ளம் பெருங்கோவில் ...... ஊனுடம்பு ஆலயம் ........ // இந்த செய்திக்கு இந்த பாடல் சரியல்ல இனிவருவது சரியானதாக இருக்கும் ……...உடம்பார் அழியின் உயிரார் அழிவார் திறம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார் உடல் வளர்க்கும் உபாயம் அறிந்தே உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே. இதுவும் திருமூலர் பாடல் தான். இந்த செய்தி உடல் நலத்தை பேணுவதற்கு, இந்த பாடல் உடல் அழிந்தால் உயிர் அழியும். ஆகையால் மெய்ஞ்ஞானம் அடைய முடியாது. ஆகையால் உடலை நலமுடன் வைத்தால் மெய்ஞ்ஞானம் அடைவதற்கு அதுவே சிறந்த உபாயமாகும். திருமூலர் பாடலை நினைவு கூறவைத்தமைக்கு நன்றி ……….. நன்றி வாழ்க வளமுடன்
Rate this:
Share this comment
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
12-ஜூலை-201915:25:30 IST Report Abuse
வல்வில் ஓரி நன்றி .....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X