அரசியல் செய்தி

தமிழ்நாடு

சென்னை ஆறுகளில் கழிவு நீர் கலப்பதை தடுக்க ரூ.2,371 கோடியில் திட்டம்

Added : ஜூலை 12, 2019 | கருத்துகள் (8)
Advertisement
 சென்னை ஆறுகளில் கழிவு நீர் கலப்பதை தடுக்க ரூ.2,371 கோடியில் திட்டம்

சென்னை:''சென்னையில் உள்ள, அடையாறு, கூவம், பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் அவற்றை சார்ந்த பிரதான நீரோடைகளில், கழிவு நீர் கலப்பதை தடுக்கும் திட்டம், 2,371 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படும்,'' என, முதல்வர், இ.பி.எஸ்., அறிவித்தார்.
சட்டசபையில், 110 விதியின் கீழ், முதல்வர் வெளியிட்ட அறிவிப்புகள்:

* கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் அதை சார்ந்த பிரதான நீரோடைகளில், கழிவு நீர் கலப்பதை தடுக்க, சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளையும், சென்னை பெருநகர குடிநீர் வாரியமும், விரிவான திட்ட அறிக்கை தயாரித்துள்ளன. இத்திட்டத்தை, 2019 முதல், 2023 வரையிலான காலகட்டத்தில் செயல்படுத்த, 2,371 கோடி ரூபாய் செலவாகும்; இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்

* நீர்நிலைகள் மாசுபடுவதை தவிர்ப்பது;தொழிற்சாலை மற்றும்இதர பயன்பாடுகளுக்கு, சுத்திகரிக்கப்பட்ட நீரை உபயோகிப்பது; கழிவு நீர் மறு உபயோகக் குழாய் கட்டமைப்பை தேர்வு செய்வது உள்ளிட்ட வழிமுறைகளுடன் கூடிய, ஒருங்கிணைந்த கொள்கையை, அரசு உருவாக்கும்
* சென்னை பெருநகர் குடிநீர் வாரியம், 26 கோடி லிட்டர் கழிவு நீரை, மூன்றாம் நிலை சுத்திகரிப்பில் சுத்திகரித்து, மறு பயன்பாட்டிற்காக, சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள நீர்நிலைகளில் விட, விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும்

* கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், திருச்சி மாநகராட்சிகளில் உள்ள, நீர் நிலைகளில், கழிவு நீர் கலப்பதை தடுத்து, சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீரை, மறு பயன்பாடுகளுக்கு உபயோகிக்கும், சாத்திய கூறுகளைக் கண்டறிய, உரிய ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்
* கோவை, வெள்ளலுாரில், 61.62 ஏக்கர் பரப்பளவில், 178.26 கோடி ரூபாய் மதிப்பில், ஒருங்கிணைந்த நவீன பஸ் நிலையம் அமைக்கப்படும்; நடப்பு நிதியாண்டில் செயல்படுத்தப்படும்.இவ்வாறு, முதல்வர் அறிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raju Katare - Chennai,இந்தியா
13-ஜூலை-201900:28:27 IST Report Abuse
Raju Katare கடற்கரை சாலையில் நடைபாதை புதிதாக போடுவது கழிவு நீர் கூவத்தில் சேராமல் தடுப்பது என்ற திட்டங்களை கடந்த 50 வருடங்களாக தவறாமல் செய்து வருகிறது தமிழ்நாடு அரசு
Rate this:
Share this comment
Cancel
Maha - Herndon,யூ.எஸ்.ஏ
12-ஜூலை-201923:44:51 IST Report Abuse
Maha நிச்சயம், மிக மிக வரவேற்கக்கூடிய திட்டம். நன்கு, ஆய்வு செய்யப்பட திட்டம், நன்றாக நடைமுறைப்படுத்தினால், நலம் பயக்கும். வாழ்த்துக்கள், அரசுக்கு.
Rate this:
Share this comment
Cancel
spr - chennai,இந்தியா
12-ஜூலை-201920:33:11 IST Report Abuse
spr அடுத்த தேர்தலில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பில்லை என்பது தெளிவாகத் தெரிந்த இவர்கள் "மக்கள் நலத்திட்டங்கள்" என்ற பெயரில் கோடிக்கணக்கில் செலவு செய்யப்போவது உறுதி மோடி கண்ணிலும் மண்ணைத்தூவி அவரிடமே கடன் வாங்கி கொள்ளையடிக்கப் போகிறார்கள். என்ன அக்கிரமம் செய்தாலும் இவர்களைத் தண்டிக்க அந்த ஆணடவன் ஏன் தயங்குகிறான்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X