மே.வங்க அரசு கஜானா காலி: ஊழியர் சம்பளத்துக்கே வழியில்லை

Updated : ஏப் 28, 2011 | Added : ஏப் 26, 2011 | கருத்துகள் (6)
Share
Advertisement
மேற்குவங்க மாநில அரசு ஊழியர்களுக்கு, இம்மாத சம்பளம் கொடுக்க கடன் கேட்டு, டில்லி சென்ற அம்மாநில நிதி அமைச்சக செயலர் வெறும் கையுடன் திரும்பி இருப்பதால், அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேற்குவங்க மாநிலத்தை, ஆட்சி செய்யும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான, இடதுசாரி ஆட்சி, கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. ஏற்கனவே, மாநிலம்

மேற்குவங்க மாநில அரசு ஊழியர்களுக்கு, இம்மாத சம்பளம் கொடுக்க கடன் கேட்டு, டில்லி சென்ற அம்மாநில நிதி அமைச்சக செயலர் வெறும் கையுடன் திரும்பி இருப்பதால், அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேற்குவங்க மாநிலத்தை, ஆட்சி செய்யும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான, இடதுசாரி ஆட்சி, கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. ஏற்கனவே, மாநிலம் இரண்டு லட்சம் கோடி ரூபாய் கடனில் சிக்கியுள்ளது. இதனால், மாநில அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.மாத சம்பளம், பென்ஷன் கொடுக்க மாநில அரசுக்கு மாதம் ஒன்றுக்கு 2,900 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. இது மட்டுமின்றி, அன்றாடம் தவிர்க்க முடியாத செலவினங்களுக்கு 1,000 கோடி ரூபாய் தேவைப்படுகிறது. அரசுக்கு வரி மற்றும் மற்ற வருவாயாக 1,600 கோடி ரூபாய் வருமானம் வருகிறது. இதை கழித்துக் கொண்டாலும், மாநிலத்திற்கு எப்படியும் இம்மாதம் 2,300 கோடி ரூபாய் தேவைப்படுகிறது.

நிதி நெருக்கடியை சமாளிக்க, மத்திய அரசிடம் கடன் கேட்டு, மாநில நிதி அமைச்சக செயலர் சி.எம்.பசாவத், கடந்த மூன்று வாரங்களில், இருமுறை டில்லி சென்று, வெறும் கையுடன் திரும்பி உள்ளார்.இதுகுறித்து, மாநில அரசு தலைமை செயலக ஊழியர்கள் அமைப்பின் பொது செயலர் கமல் சக்ரவர்த்தி கூறும்போது, "மாநில அரசின் நிதி நெருக்கடி பற்றி எங்களுக்கு தெரியும். கடன் பெற்று சம்பளம் மற்றும் பென்ஷன் வழங்க அரசு அனைத்து முயற்சிகளிலும் இறங்கி உள்ளது. ஹிட்கோ பணம் அரசின் பணம் அல்ல. ஹிட்கோவில் இருந்து கடன் பெற மத்திய அரசின் அனுமதி தேவை' என்றார்.

தனியாரிடம் இருந்து கடன் பெற மத்திய அரசின் அனுமதி தேவை. கடந்த 1991ம் ஆண்டில், இதேபோன்று, நிதி நெருக்கடியில் சிக்கிய மறைந்த முன்னாள் முதல்வர் ஜோதிபாசு அரசு, பியர்லெஸ் ஜெனரல் பைனான்சில் இருந்து கடன் பெற்றது. ஆனால், அப்போது தேவைப்பட்டது வெறும் 60 கோடி ரூபாய் தான். ஆனால், இன்று தேவைப்படும் தொகை அதிகமாக இருப்பதால், மாநில அரசு திண்டாடி வருகிறது.இம்மாதம் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்காவிட்டால், மே 3, 7 மற்றும் 10 ஆகிய தேதிகளில் நடக்கும் இறுதி மூன்று கட்ட தேர்தல்களில் அரசுக்கு எதிராக, அரசு ஊழியர்களின் ஓட்டு திரும்பும் என்ற கலக்கத்தில் தற்போது இடதுசாரி அரசு உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagarajan.Su - Chennai,இந்தியா
27-ஏப்-201106:49:16 IST Report Abuse
Nagarajan.Su தமிழகத்திலும் அரசு கஜானா காலியாகி இதே நிலைதான். பெரும்பாலான, ஊராட்சி, உள்ளாட்சி, பஞ்சாயத்து பணியாளர்களுக்கு, சில பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு இரண்டு மாத சம்பளம் பாக்கி. மேலும் ஆறாவது ஊதிய கமிஷன் நிலுவை தொகை, வருடாந்திர சம்பளஉயர்வு போன்ற எந்த பலனும் கிடைக்கவில்லை. இதற்கு வேலூர் மாவட்டம், திருவள்ளூர் மாவட்டம், திருவண்ணாமலை மாவட்டம் சிறந்த உதாரணம். மற்ற சில மாவட்டங்களிலும் இதே நிலைதான். இதில் வேலை செய்யும் பணியாளர்கள் வரி வசூலித்தால் தான் இனி சம்பளம் பெறமுடியுமென்ற நிலை. நகராட்சி மற்றும் மாநகராட்சி, ஆட்சித்துறை, அமைச்சக பணியாளர்கள் இவர்களுக்கு மட்டும் சம்பளம் மற்ற உதவிகள் ஒழுங்காக கிடைத்துவிடுகிறது. இந்த பாதிக்கப்பட்ட அனைத்து அரசு ஊழியர்களும் வெளியே சொல்லமுடியாமல் உள்ளுக்குள் குமுறிக்கொண்டு இருக்கிறார்கள்.
Rate this:
Cancel
sandilyan - chennai,இந்தியா
27-ஏப்-201100:50:13 IST Report Abuse
sandilyan கலர் டிவி, இலவச ஆம்புலன்சே, இலவச பஸ் பாஸ், மருத்துவ காப்பீட்டு திட்டம், ஐந்து நாள் சத்துணவு முட்டை, இலவச மின்சாரம், இலவச வீடு, ஒரு ரூபாய் அரிசி என எத்தனையோ திட்டங்கள் தலைவர் கலைஞர் போட்டுள்ளார். தமிழகத்தில் பண பிரச்னை இல்லை. ஒண்ணுமே செய்யாத கம்யூனிஸ்ட் வங்கத்தில் பண பிரச்னை. இதிலிருந்தே தெரிகிறது, தமிழர்கள் இப்படிப்பட்ட நல்ல முதல்வரை பெற்று இருப்பதற்கு கொடுத்து வைத்தவர்கள்.
Rate this:

Microsoft OLE DB Provider for SQL Server error '80040e31'

Query timeout expired

/xtralog_load_full_taboolabc.asp, line 394