பொது செய்தி

தமிழ்நாடு

'கன்னட நடிகர்களிடம் இருந்து காப்பாற்ற வேண்டும்: நடிகை விஜயலட்சுமி கதறல்

Added : ஜூலை 12, 2019 | கருத்துகள் (3)
Advertisement
 'கன்னட நடிகர்களிடம்  இருந்து காப்பாற்ற வேண்டும்: நடிகை விஜயலட்சுமி கதறல்

சென்னை:தமிழ் பெண் என்ற காரணத்தால், பெங்களூரில் சிக்கி அவதிப்படுவதாக, நடிகை விஜயலட்சுமி, திடீர் புகார் தெரிவித்துள்ளார்.
விஜய், சூர்யா நடித்த, ப்ரண்ட்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்தவர், விஜயலட்சுமி. சமூக வலைதளத்தில் இவர் வெளியிட்டுள்ள, வீடியோ பதிவு:தமிழில், சினிமா வாய்ப்பு இல்லாததால், பெங்களூரு வந்தேன். இங்கு வந்து, இரண்டு படத்தில் நடித்தேன். அதன்பின், கன்னட, 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்க வற்புறுத்தினர்.

மருத்துவமனை


உடல்நிலையை காரணம் காட்டி மறுத்து விட்டேன். ஒரு கட்டத்தில், உடல்நிலை மோசமானது. மருத்துவமனையில், இரண்டு மாதம் அனுமதிக்கப் பட்டிருந்தேன். நடிகர் சுதீப் உதவினார். இதற்கிடையில், உடல்நிலை மோசமாகி, அங்கிருந்து, வேறு மருத்துவமனையில் சேர்க்கப் பட்டேன்.ரவிபிரகாஷ் என்ற கன்னட நடிகர், எனக்கு, 1 லட்சம் ரூபாய் கொடுத்து, உதவி செய்தார். அதன் காரணமாக, அவர், என்னிடம் தவறாக நடந்து கொண்டார். அதனால், அவர் மீது புகார் கொடுத்தேன்.
இதையடுத்து, எனக்கு அதிகம் செலவு செய்ததாகவும், என் சிகிச்சை பற்றியும் தவறான தகவல்களை, அவர் பரப்பினார். நான் தெரிவித்த புகாரில், அவர் மீது, போலீசில் வழக்குப்பதிவு செய்தனர்; எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திரையுலகிலும், என்னை பற்றி, அவர் தவறாக சித்தரித்து உள்ளார்.

கஷ்டம்
இப்போது, நான் வீடு கூட இல்லாமல், ரொம்பவே கஷ்டப்படுகிறேன். இரண்டு வாரத்திற்கு முன், என்னை கைது செய்வதற்கு முயன்றனர். தமிழ் பெண் என்பதால், என்னை அதிகம் சிரமத்திற்கு ஆளாக்குகின்றனர். புகாரை கூட, கன்னடத்தில் எழுதி வரும்படி சொல்கின்றனர்.நிறைய தமிழர்கள், இங்கு பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்; அது வெளியே தெரிவதில்லை.
தமிழ் பெண்
இந்த ஊரில் சிக்கி, ரொம்பவே கஷ்டப்படுகிறேன். எனக்கு உதவி செய்ய வேண்டுகிறேன். நான் மீண்டும், சென்னை திரும்ப வேண்டும்.நான்பட்ட கடன், 1 லட்சம் ரூபாயை திருப்பி தர வேண்டும். தமிழ் திரைஉலகினர், எனக்கு உதவி செய்ய வேண்டும். இங்குள்ள கன்னட நடிகர்கள், போலீசார், வழக்கறிஞர் என அனைவரும், என்னை தமிழ் பெண் என்ற ஒன்றை கூறியே, சிரமப்படுத்துகின்றனர்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
12-ஜூலை-201912:51:34 IST Report Abuse
Darmavan கன்னட வெறியர்கள் எதுவும் செய்வார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
12-ஜூலை-201908:34:00 IST Report Abuse
Nallavan Nallavan தான் தப்பிக்க இனப் பிரச்னையைக் கையில் எடுக்கிறாள் .....
Rate this:
Share this comment
Cancel
rajesh -  ( Posted via: Dinamalar Android App )
12-ஜூலை-201902:36:34 IST Report Abuse
rajesh India will never go forward...... there is no unity among states .......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X