சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மேட்டூர் அணை பகுதியில் 16 யானைகள் முகாம்

Added : ஜூலை 12, 2019
Advertisement
 மேட்டூர் அணை பகுதியில் 16 யானைகள் முகாம்

மேட்டூர்:மேட்டூர் அணை, பண்ணவாடி நீர்பரப்பு பகுதியில், 16 யானைகள் புகுந்து, சோளம், கம்பு பயிர்களை சேதப்படுத்தின.

சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின், பண்ணவாடி நீர்பரப்பு பகுதியில், காவிரி கரையோரம், விவசாயிகள் பயிரிட்டுள்ள சோளம், கம்பு போன்றவை, அறுவடைக்கு தயாராக உள்ளன.நேற்று முன்தினம் இரவு, தர்மபுரி மாவட்டம், ஏமனுார் வனப்பகுதியிலிருந்து, காவிரியாற்றை கடந்து, பண்ணவாடி நீர்பரப்பு பகுதிக்கு, இரண்டு குட்டிகள் உள்பட, 16 யானைகள் நுழைந்து, சாகுபடி செய்திருந்த நிலங்களில் புகுந்து, பயிர்களை சாப்பிட்டதோடு, மிதித்து சேதப்படுத்தின.
நேற்று காலை, அப்பகுதிக்கு சென்ற விவசாய தொழிலாளர்கள், யானை கூட்டத்தை கண்டு, அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.இதையறிந்த, மேட்டூர் வன ஊழியர்கள், பட்டாசு வெடித்து, யானைகளை விரட்டினர். ஆனால், ஆற்றின் மறுகரைக்கு செல்லாமல், கோட்டையூர் நீர்பரப்பு பகுதியிலுள்ள விவசாய நிலத்தில், யானைகள் புகுந்தன.உணவிற்காக, மீண்டும் யானைகள் மீண்டும், பண்ணவாடி பகுதிக்கு வரக் கூடும் என்பதால், விவசாயிகள் கலக்கம்அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X