பொது செய்தி

தமிழ்நாடு

மழை நீரை பாசனத்திற்கு சேகரித்த கிராம மக்கள்

Added : ஜூலை 12, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
திருப்புத்துார்:திருப்புத்துார் அருகே நெடுமரம் கண்மாய்க்கு ரோட்டோர வயல்களில் தேங்கியுள்ள நீரை கிராமத்தினர் வாய்க்கால் ஏற்படுத்தி தண்ணீர் வர முயற்சி செய்தனர்.திருப்புத்துார் பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்கிறது. நேற்று முன்தினம் நெடுமரம் கிராமத்தில் விவசாயிகள் சிலர் கூடி ரோட்டோர வயல்களில் தேங்கியிருந்த மழைநீரை வடிகால்களை சீரமைத்து கண்மாய்க்கு
 மழை நீரை பாசனத்திற்கு சேகரித்த கிராம மக்கள்

திருப்புத்துார்:திருப்புத்துார் அருகே நெடுமரம் கண்மாய்க்கு ரோட்டோர வயல்களில் தேங்கியுள்ள நீரை கிராமத்தினர் வாய்க்கால் ஏற்படுத்தி தண்ணீர் வர முயற்சி செய்தனர்.
திருப்புத்துார் பகுதியில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்கிறது. நேற்று முன்தினம் நெடுமரம் கிராமத்தில் விவசாயிகள் சிலர் கூடி ரோட்டோர வயல்களில் தேங்கியிருந்த மழைநீரை வடிகால்களை சீரமைத்து கண்மாய்க்கு அனுப்பும் முயற்சியில் இறங்கினர். இதனால் கண்மாய்க்கு நீர் வரத்து துவங்கியது. கொட்டும் மழையிலும் உற்சாகமாக வடிகால்களை சீரமைத்தனர்.விவசாயி காசிநாதன் கூறுகையில், 'நெடுமரம் முன்பு சின்ன தஞ்சாவூர் என்பார்கள். தஞ்சாவூரை அடுத்து நெல் விவசாயம் செழித்த பகுதியாக காணப்பட்டது. ஆற்றில் நல்ல நீர் வரத்து ஏற்பட்டது. தற்போது மழை பெய்யாமல் வறட்சியால் கடந்த 7 ஆண்டுகளாக விவசாயம் செய்ய முடியவில்லை. இதனால் இப்போது மழை பெய்தவுடன் மழைநீரை கண்மாய்க்கு செல்ல கால்வாய்களை வெட்டி விட்டோம். மலையரசிஅம்மன், மங்கச்சி அம்மன் அருளால் நிச்சயமாக 7 நாட்கள் மழை தொடரும் கண்மாயை நிரப்பி விடுவோம்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Mumbai,இந்தியா
12-ஜூலை-201904:26:45 IST Report Abuse
 Muruga Vel பாராட்ட வேண்டிய முயற்சி .. மற்ற கிராம மக்களும் முயற்சிக்கலாம் ..அரசாங்கத்தையே எதிர் பார்ப்பதை விட இத்தகைய முயற்சிகள் பலனை தரும் .. சில அரசியல்வாதிகளும் அரசு அலுவலர்களும் இந்த காரியங்களை அரசே செய்ததாக பில் போடாமல் அவர்களும் இணைந்து செயல் பட்டால் விவசாயம் பெருகும் ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X