பொது செய்தி

தமிழ்நாடு

கிடப்பில் போடப்பட்ட கீழடி அருங்காட்சியக பணி

Updated : ஜூலை 12, 2019 | Added : ஜூலை 12, 2019
Share
Advertisement
திருப்புவனம்:கீழடியில் தமிழக அரசு சார்பாக அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெறும் பெயரளவில் இருப்பதால் பார்வையாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் பண்டைய தமிழர் நாகரீகம் குறித்த அகழாய்வில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டன. பொருட்கள் அனைத்தும் மத்திய தொல்லியல்துறை வசம் உள்ளன.கீழடியிலேயே
 கிடப்பில் போடப்பட்ட கீழடி அருங்காட்சியக பணி

திருப்புவனம்:கீழடியில் தமிழக அரசு சார்பாக அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெறும் பெயரளவில் இருப்பதால் பார்வையாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடியில் பண்டைய தமிழர் நாகரீகம் குறித்த அகழாய்வில் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டன. பொருட்கள் அனைத்தும் மத்திய தொல்லியல்துறை வசம் உள்ளன.கீழடியிலேயே அருங்காட்சியகம் அமைக்கப்படும் என தமிழ் வளர்ச்சிதுறை அமைச்சர் பாண்டியராஜன் அறிவித்தார். கடந்த மே 28ம் தேதி கீழடியில் 1.88 ஏக்கர் நிலத்தை வருவாய்துறையினர் கையகப்படுத்தி தொல்லியல்துறை வசம் ஒப்படைத்தனர். அருங்காட்சியகம் அமைக்க ஒரு கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டது.ஆறு மாதத்தில்பணிகள் முடிவடையும் என அமைச்சர் பாண்டியராஜன் அறிவித்தார். அறிவிப்பு வெளிவந்து 45 நாட்கள் ஆகியும் இன்று வரை பணி துவங்கவில்லை.தொல்லியல்துறை சார்பில் நடப்பட்ட எல்லைக்கற்கள் ஓரமாக பிடுங்கி வீசப்பட்டுள்ளன. திட்டமிட்டபடி அருங்காட்சியகம் அமைக்கப்படுமாஎன சந்தேகம் எழுந்துள்ளது.கீழடியில் 5ம் கட்ட அகழாய்வின் போது இரட்டைச்சுவர், வட்டப்பானை உள்ளிட்டவைகள் கண்டறியப்பட்டதால் அகழாய்வை காணவும்,பொருட்களை காணவும் தமிழகம் முழுவதும் இருந்து பார்வையாளர்கள் வருகின்றனர். ஆனால் பொருட்களை காண முடியாமல் ஏமாந்து செல்கின்றனர்.
கீழடியில் தற்காலிக கூரை அமைப்பு

கீழடியில் அகழாய்வில் ஈடுபட்டுள்ள ஆய்வாளர்கள் தங்க,பொருட்களை பாதுகாக்க தற்காலிக தங்குமிடம் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.தமிழக தொல்லியல்துறை சார்பில் ஐந்தாம் கட்ட அகழாய்வு நடக்கிறது. முதலில் கருப்பையா, முருகேசன் ஆகியோரது நிலத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தற்போது மாரியம்மாள்நிலத்திலும் அகழாய்வு பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொல்லியல்துறை அதிகாரிகளுடன், அகழாய்வு ஆராய்ச்சி கல்லுாரி மாணவர்களும் ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர்.அகழாய்வில் கண்டறியப்பட்ட பொருட்களை பாதுகாப்பாக வைக்கவும், அதிகாரிகள் தங்கவும் தற்காலிக தங்குமிடம் அமைக்க முடிவு செய்யப்பட்டு இதற்கான பணிகள் துவங்கியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X