பொது செய்தி

தமிழ்நாடு

மழைநீர் சேகரிப்பு மக்கள் கடமை: அமைச்சர் வேலுமணி வலியுறுத்தல்

Added : ஜூலை 12, 2019
Share
Advertisement
அம்பத்துார்:''நீர்நிலைகளை துார்வாரும் பணியை, மக்கள் ஈடுபாட்டுடன் செய்யும் போது, அது, விரைவாகவும், தரமாகவும் நடக்கும். மழைநீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்துவதோடு, மரக்கன்றுகள் நடுவதையும், மக்கள், தங்கள் கடமையாக செய்ய வேண்டும்,'' என, உள்ளாட்சித்துறை அமைச்சர், வேலுமணி கூறினார்.தமிழகம் முழுவதும், நீர்நிலைகளை சீரமைக்கும் பணியில், பொது நல சங்கங்கள் ஆர்வமுடன்
 மழைநீர் சேகரிப்பு மக்கள் கடமை:  அமைச்சர் வேலுமணி வலியுறுத்தல்

அம்பத்துார்:''நீர்நிலைகளை துார்வாரும் பணியை, மக்கள் ஈடுபாட்டுடன் செய்யும் போது, அது, விரைவாகவும், தரமாகவும் நடக்கும். மழைநீர் சேகரிப்பு திட்டத்தை செயல்படுத்துவதோடு, மரக்கன்றுகள் நடுவதையும், மக்கள், தங்கள் கடமையாக செய்ய வேண்டும்,'' என, உள்ளாட்சித்துறை அமைச்சர், வேலுமணி கூறினார்.
தமிழகம் முழுவதும், நீர்நிலைகளை சீரமைக்கும் பணியில், பொது நல சங்கங்கள் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றன.நீர்நிலைகள் பாதுகாப்பு இயக்கம், சென்னை, அம்பத்துாரில் உள்ள, கங்கை அம்மன் கோவில் குளம், இ.பி., காலனி, சிவா விஷ்ணு கோவில் குளம் மற்றும் பட்டரவாக்கம் பெரிய குளம் போன்றவற்றை, துார்வாரி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
சீரமைப்பு பணிகளுக்கு உதவியாக, உள்ளாட்சித்துறை சார்பில், பொக்லைன் இயந்திரம் மற்றும் லாரிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், குளங்களை துார் வாரும் பணியை, நேற்று மாலை, உள்ளாட்சித்துறை அமைச்சர், வேலுமணி ஆய்வு செய்தார். குளத்தை சுற்றி, மரக்கன்று களை நடவும், அவர் வலியுறுத்தினார். ஆய்வின்போது, சென்னை மாநகராட்சி கமிஷனர், பிரகாஷ், அம்பத்துார் எம்.எல்.ஏ., அலெக்சாண்டர் மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.
ஆய்வுக்குப் பின், அமைச்சர், வேலுமணி கூறியதாவது:நீர்நிலைகளை துார்வார, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், பொதுநல சங்கங்களும் முன் வந்துள்ளன. இந்த பணிக்கு தேவையான உதவிகளை, அரசு செய்து வருகிறது. துார் வாரும் பணியை, மக்கள் ஈடுபாட்டுடன் செய்யும் போது, அந்த பணி விரைவாகவும், தரமாகவும் இருக்கும். அரசும், உள்ளாட்சி அமைப்புகள் வழியாக, குளங்களை துார் வாரி, சீரமைத்து வருகிறது.
சென்னை மாநகராட்சி முழுவதும், மழைநீர் சேகரிப்புக்காக, 210 குளங்கள் துார் வாரப் படுகின்றன. பணி முழுமையாக முடிந்தால், 1 டி.எம்.சி., அளவுக்கு, கூடுதலாக தண்ணீர் சேமிக்க முடியும். அதனால், நிலத்தடி நீர் மட்டம் உயரும். மேலும், சில இடங்களில் உள்ள, உப்பு கலந்த நீர், நன்னீராக மாற வாய்ப்புள்ளது.
சென்னை மாநகராட்சியில், வார்டுக்கு, 1,000 வீதம், மொத்தம், இரண்டு லட்சம் மழை நீர் சேகரிப்பு தொட்டிகள் கட்டும் பணி, துவக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அமைக்கப்பட்ட, 8.7 லட்சம் மழைநீர் சேகரிப்பு தொட்டிகளும், ஆய்வு செய்யப்பட்டு, தண்ணீர் செல்லாதவை சீரமைக்கப்படும். மழைநீர் சேகரிப்பு திட்டத்தை, 2001 முதல், தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது;
2015ல்,மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வை,இயக்கமாக செயல்படுத்தியது.அந்த இயக்கம் இன்றும் தொடர்கிறது. மழை அளவு குறைந்துள்ள, இன்றைய காலகட்டத்தில், மக்கள் அனைவரும், மழை நீர் சேகரிப்பையும், மரங்கள் நடுவதையும் கடமையாக செய்ய வேண்டும். தமிழகம் முழுவதும், அரசு சார்பில், 70 லட்சம் மரக்கன்றுகளை நடப்பட உள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X