பொது செய்தி

தமிழ்நாடு

சபாஷ் கலெக்டரய்யா... ஏரியை தூர் வாரும் இளைஞர்களுக்கு ரூ.25 ஆயிரம் வழங்கி ஊக்கம்

Added : ஜூலை 12, 2019
Advertisement
சபாஷ் கலெக்டரய்யா...  ஏரியை தூர் வாரும்  இளைஞர்களுக்கு ரூ.25 ஆயிரம் வழங்கி ஊக்கம்

தஞ்சாவூர்:தன் சொந்த ஊரில் உள்ள ஏரியில், துார் வாரும் பணியில் ஈடுபட்டுள்ள இளைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில், கடலுார் கலெக்டர், 25 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கியுள்ளார்.
கடலுார் கலெக்டர், அன்புச்செல்வன், தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகில் உள்ள, நாடியம் கிராமத்தைச் சேர்ந்தவர். சொந்த ஊரில் நடந்த விழாவில் பங்கேற்க, அவர், நேற்று வந்தார்.தன் ஊரில் உள்ள, 550 ஏக்கர் பரப்பளவு உடைய பெரிய ஏரியை, கடைமடைப் பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம் சார்பில், இளைஞர்கள் இணைந்து துார் வாருவதை கேள்விப்பட்டு, அங்கு சென்று, பணியை பார்வையிட்டார்.
துார் வாரும் பணிக்காக, தன் சார்பில், 25 ஆயிரம் ரூபாயை, கலெக்டர், அன்புச்செல்வன், இளைஞர்களிடம் வழங்கி, அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.அப்போது, அவர் பேசியதாவது:

இளைஞர்கள், தவறான வழியில் செல்லாமல்,ஏரியை துார் வாரி,தண்ணீரை சேமிக்க வேண்டும் என, சமூக அக்கறையோடு செயல்படுவது பாராட்டத்தக்கது. இதில், அதிகம் கவனம் செலுத்தி, வெற்றி பெற வேண்டும்.இளைஞர்களின் முயற்சி, மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக உள்ளது.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X