பொது செய்தி

தமிழ்நாடு

இலக்கு! 5000 டன் கொப்பரை கொள்முதலுக்கு...திண்டுக்கல்லில் அடுத்த வாரம் துவக்கம்

Updated : ஜூலை 12, 2019 | Added : ஜூலை 12, 2019
Share
Advertisement
திண்டுக்கல்:திண்டுக்கல்லில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலம் 5 ஆயிரம் டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் மதுரை, கோவை, தஞ்சை, ஈரோடு, கன்னியாகுமரி உட்பட 21 மாவட்டங்களில் 4 லட்சம் எக்டேருக்கு அதிகமாக தென்னை சாகுபடியாகிறது. ஆண்டுக்கு 40 லட்சத்துக்கும் அதிகமாக தேங்காய் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 2 லட்சம் டன் கொப்பரை

திண்டுக்கல்:திண்டுக்கல்லில் ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலம் 5 ஆயிரம் டன் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மதுரை, கோவை, தஞ்சை, ஈரோடு, கன்னியாகுமரி உட்பட 21 மாவட்டங்களில் 4 லட்சம் எக்டேருக்கு அதிகமாக தென்னை சாகுபடியாகிறது. ஆண்டுக்கு 40 லட்சத்துக்கும் அதிகமாக தேங்காய் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 2 லட்சம் டன் கொப்பரை தேங்காய் உற்பத்தி செய்யப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் பழநி, நத்தம், வத்தலக்குண்டில் 35 ஆயிரம் எக்டேரில் தென்னை சாகுடியாகிறது.தற்போது கொப்பரைக்கு கொள்முதல் ஆதார விலையாக ஒரு கிலோவுக்கு ரூ.95.21 நிர்ணயம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் விலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் வேளாண் விளை பொருள் விற்பனை வாரியம், ஒழுங்குமுறை விற்பனை கூடங்கள் மூலமாக கொப்பரை தேங்காயை கொள்முதல் செய்ய முடிவு செய்துள்ளது.
கொப்பரை உற்பத்தி செய்யும் மாவட்டங்களிலிருந்து மொத்தம் 50 ஆயிரம் டன் காய்களை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் இருந்து 5 ஆயிரம் டன் கொப்பரை கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பழநி, நத்தம், வத்தலக்குண்டு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் அடுத்த வாரம் முதல் கொள்முதல் துவங்கும். இதுவரை ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூலமாக உளுந்து, பாசிப்பயறு கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது முதன் முறையாக கொப்பரை கொள்முதல் செய்யப்பட உள்ளது. ''கொள்முதலின் போது விவசாயிகள் சிட்டா அடங்கல், ஆதார் கார்டு, வங்கி பாஸ்புக் அவசியம் கொண்டு வர வேண்டும். கொள்முதல் பணம் வங்கி கணக்கில் செலுத்தப்படும்'' என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X