பொது செய்தி

தமிழ்நாடு

'ரிங்' ரோடு பணி ஆமை வேகம்

Added : ஜூலை 12, 2019
Advertisement

பல்லடம்:பல்லடம் என்.எச்., ரோட்டை கடப்பதற்காக திட்டமிடப்பட்டுள்ள ரிங் ரோடு பணிகள், ஆமை வேகத்தில் நடந்து வருவது, வாகன ஓட்டிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.பல்லடத்தில், விபத்துகளை தடுக்கவும், நெரிசலை கட்டுப்படுத்தவும், பை-பாஸ் ரோடு அமைக்கப்பட வேண்டும் என, பல்லடம் மக்கள் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். அதன் அடிப்படையில், வணிக ரீதியான போக்குவரத்து நிறைந்த, கோவை திருப்பூர் நகரங்களை, பல்லடத்துடன் இணைக்கும் வகையில் ரிங் ரோடு அமைக்க, திட்டமிடப்பட்டது.அதற்கான பணிகள், ஆமை வேகத்தில் நடந்து வருவது, வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.பணிகள் மந்தமாக உள்ளது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறியதாவது:திருச்சி ரோடு காளிவேலம்பட்டி பிரிவு அருகே துவங்கி, ராசாக்கவுண்டம்பாளையம், மாணிக்காபுரம், கல்லம்பாளையம், வெட்டுப்பட்டான்குட்டை வரை ஒரு பகுதியும், குங்குமபாளையம், மலையம்பாளையம், நல்லுார்பாளையம் வழியாக மாதப்பூர் வரை மற்றொரு பகுதியும் அமைக்கப்பட்டு என்.எச்.,ரோடுடன் இணையும். ஏற்கனவே உள்ள ரோடுகள், மற்றும் புதிதாக கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்கள் என, 100 அடி அகலத்துடன், 14 கி.மீ., தொலைவுடன் ரிங் ரோடு அமைகிறது.கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்கள் அனைத்தும் வறட்சி மிகுந்த காலி இடங்களே. அவற்றுக்கான இழப்பீடு, மற்றும் பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்டதும், பணிகள் இரண்டு மாதங்களுக்குள் துவங்க வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகரித்து வரும் நிலையில், ரிங் ரோடு பணிகளை விரைந்து முடிந்தால் மட்டுமே, விபத்துகள் குறைந்து, வாகன ஓட்டிகள் நிம்மதி பெருமூச்சு விட முடியும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X