அவிநாசி:கர்நாடக எல்லையில் கடத்தப்பட்ட பான் மசாலா ஏற்றி வந்த வேன், அவிநாசி அருகே மீட்கப்பட்டது.பெங்களூருவை் சேர்ந்த அனில் என்பவர், பான் மசாலா பொருட்கள் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். கடந்த இரு நாட்களுக்கு முன், தனக்கு சொந்தமான, வேனில், பான் மசாலா பாக்கெட்டுகளை பண்டலாக ஏற்றி, அம்மாநிலத்தின் பிற இடங்களுக்கு அனுப்பியுள்ளார்.தமிழக - கர்நாடக எல்லையில், மூன்று மர்ம ஆசாமிகள், வாகனத்தை வழிமறித்து, கடத்தி சேலம் வழியாக கோவைக்கு சென்று கொண்டிருந்தனர்.
நேற்று முன்தினம் நள்ளிரவு, அவிநாசி அருகே உள்ள பழங்கரை பைபாஸ் ரோட்டை கடக்க முற்பட்ட போது, வாகனத்தின் டயர் பஞ்சராகி, நின்றது.அதேநேரம், இரவு ரோந்து பணியில் ஈடுபட்ட எஸ்.ஐ., செந்தில்குமார் மற்றும் போலீசார், வேன் அருகே சென்றனர். போலீசாரை பார்த்ததும், மூவரும் தப்பியோடினர். கடத்தப்பட்ட வேன் வாகன உரிமையாளர், ஏற்கனவே, கர்நாடக போலீசில் புகார் கொடுத்த நிலையில், நேற்றிரவு, 10:00 மணிக்கு அவிநாசியில், புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE