திருப்பூர்,:தமிழக முதல்வர் திறந்து வைத்த, மாணவர் விடுதி கட்டடத்தை, விரைவில் பயன்பாட்டுக்கு ஒப்படைக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில், 24 பள்ளி மாணவர் தங்கும் விடுதிகள் செயல்படுகின்றன.
பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு, 19 விடுதிகள்; மிக பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு, மூன்று; சீர்மரபினர் மாணவர்களுக்கு, இரண்டு விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.இவற்றில், சீர்மரபினர் விடுதி ஒன்று, தனியார் கட்டடத்தில் இயங்கி வருகிறது.
திருப்பூர் வடக்கு தொகுதிக்கு உட்பட்ட மண்ணரை பகுதியில், 10 லட்சம் ரூபாயில், சீர்மரபினர் நல மாணவர் விடுதி கட்டப்பட்டுள்ளது.ஊத்துக்குளி ரோடு, குளத்துப்பாளையம் பிரிவு அருகே, விடுதி அமைக்கப்பட்டு, நீண்ட நாட்களாக பூட்டி வைக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் பழனிசாமி, வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக, விடுதியை திறந்து வைத்தார்.திறப்பு விழா முடிந்து ஒரு மாதம் ஆகும் நிலையில், மாணவர் விடுதி இன்னும் பயன்பாட்டுக்கு வராமல் இருக்கிறது. பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அதிகாரிகள், மாணவர் விடுதிக்கு தேவையான, குடிநீர், மின் இணைப்பு உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுத்து, மாணவர் பயன்பாட்டுக்கு ஒப்படைக்க, ஆவன செய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE