பல்லடம்:தரமற்ற தண்ணீர் கேன் விற்பனை செய்யப்படுவதை தடுக்க, உணவு பாதுகாப்பு துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது, பல்லடம் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.தண்ணீர் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், உள்ளாட்சிகள் மூலம், குடியிருப்புகளுக்கு வினியோகிக்கப்படும் குடிநீரை தவிர்த்து, விலைக்கு வாங்கும் குடிநீரே தீர்வு என்ற நிலைக்கு, மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
அதன் காரணமாக, குடிநீர் கேன்களின் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.கேன்களின் விற்பனையை அதிகரிக்க, விலையை குறைத்தும், டெலிவரி இலவசம் எனவும், மக்களை கவரும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். தொழில் போட்டி ஒருபுறமிருக்க, தரமற்ற குடிநீர் கேன்களும் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுவதாக அஞ்சப்படுகிறது.சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'பொதுமக்களின் குடிநீர் தேவை அதிகரித்து வருவதால், அதை சாதகமாக்கும் சிலர், தரமற்ற குடிநீர் கேன்களை வினியோகிக்கின்றனர். நீண்ட நாட்கள் இருப்பு வைத்து விற்பனை செய்வதால், அவற்றில் புழுக்கள், கிருமிகள் உருவாகின்றன.
மேலும், முறையாக சுத்திகரிக்காமல், குப்பை, துாசுடன் விற்பனை செய்யப்படுவதாகவும் சந்தேகம் எழுகிறது. அவற்றால், மக்களுக்கு வைரஸ் உள்ளிட்ட மறைமுகமான காய்ச்சல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, அனுமதி பெறாமல், தரமற்ற குடிநீர் கேன் விற்பனை செய்யப்படுவதை தடுக்க, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், சோதனை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE