சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விவசாய கிணறுகளில் கேபிள் ஒயர் திருட்டு

Added : ஜூலை 12, 2019
Share
Advertisement
பொங்கலுார்:பொங்கலுார் பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒவ்வொரு விவசாய கிணற்றில் இருந்தும் கேபிள் ஒயர்கள் திருடு போனது.இதுகுறித்து விவசாயிகள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் ஒரு சிலரை கைது செய்தனர். சில ஆண்டுகளாக நின்று போயிருந்த கேபிள் ஒயர் திருட்டு மீண்டும் துவங்கியுள்ளது. இது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பொங்கலுார் அவிநாசி பாளையத்தை

பொங்கலுார்:பொங்கலுார் பகுதியில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒவ்வொரு விவசாய கிணற்றில் இருந்தும் கேபிள் ஒயர்கள் திருடு போனது.இதுகுறித்து விவசாயிகள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் ஒரு சிலரை கைது செய்தனர். சில ஆண்டுகளாக நின்று போயிருந்த கேபிள் ஒயர் திருட்டு மீண்டும் துவங்கியுள்ளது. இது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பொங்கலுார் அவிநாசி பாளையத்தை சேர்ந்தவர் முருகராஜ், நாகரத்தினம், பாலகோபால் துரைசாமி, குப்புசாமி, விசாலாட்சி, ரத்தினசாமி ஆகியோர் தோட்டங்களில், 1,500 மீ., கேபிள் திருட்டு போனது. இதன் மொத்தம், மதிப்பு, 1.60 லட்சம் ரூபாய். விவசாயிகள் அவிநாசி பாளையம் போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.விவசாயிகள் கூறுகையில், 'நாங்களே மிகவும் சிரமப்பட்டு, விவசாயம் செய்து வருகிறோம். இந்த சூழலில், பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து, கேபிள் வாங்கி, கிணற்றுக்கு மோட்டாருக்கு பொருத்தினோம். திருட்டு போனதால், கஷ்டப்படுகிறோம். திருடர்களை கண்டுபிடிக்க வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X