கோர்ட்டில் ஆஜரானார் இந்திராணி முகர்ஜி

Updated : ஜூலை 12, 2019 | Added : ஜூலை 12, 2019 | கருத்துகள் (21)
Advertisement
கோர்ட்டில் ஆஜரானார் இந்திராணி முகர்ஜி

புதுடில்லி: ஐ.என்.எக்ஸ்., மீடியா முறைகேடு வழக்கில், அப்ரூவராக மாறியுள்ள இந்திராணி முகர்ஜி, நேற்று, டில்லியில் உள்ள, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி, நீதிமன்றம் தனக்கு அளித்த மன்னிப்பை ஏற்றுக்கொள்வதாகஅறிவித்தார்.ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனத்தின் உரிமையாளரான, இந்திராணி முகர்ஜி, தன் மகளை கொலை செய்த வழக்கில், மஹாராஷ்டிரா மாநிலம், மும்பை சிறையில் அடைக்கப்பட்டுஉள்ளார்.





காங்கிரஸ் தலைமையிலான, முந்தைய, ஐ.மு., கூட்டணி ஆட்சியின்போது, ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனம், 305 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீட்டை பெற, மத்திய அரசின் அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம், தடையில்லா சான்று வழங்கியது.காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம், அப்போது, மத்திய நிதியமைச்சராக இருந்தார். விதிமுறைகளை மீறி, இந்த அனுமதி அளிக்கப்பட்டதாகவும், இதற்கு, சிதம்பரத்தின் மகன் கார்த்தி உதவியதாகவும், இதற்காக, அவருக்கு வேண்டிய நிறுவனத்துக்கு, இந்திராணி முகர்ஜி தரப்பில் லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும்குற்றச்சாட்டு எழுந்தது.இது குறித்து, சி.பி.ஐ., மற்றும் அமலாக்க துறை, தனித்தனியாக விசாரித்து வருகின்றன. இந்நிலையில், இந்த வழக்கில், தான்அப்ரூவராக மாறப் போவதாக, இந்திராணி, டில்லி, சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.நேற்று, சிறப்பு நீதிமன்றத்தில், இந்திராணி ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது, இந்த வழக்கில், அனைத்து உண்மைகளையும் தெரிவிக்கப் போவதாக, இந்திராணி தெரிவித்தார்.அவர், அப்ரூவராக மாற, நீதிபதி, அருண் பரத்வாஜ், அனுமதி அளித்தார். இதன்பின், தனக்கு, நீதிமன்றம் அளிக்கும் மன்னிப்பை ஏற்றுக்கொள்வதாக, இந்திராணி தெரிவித்தார்.இதையடுத்து, வழக்கின் விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rafi - Riyadh,சவுதி அரேபியா
13-ஜூலை-201912:50:51 IST Report Abuse
Rafi யாறினாலோ இந்தம்மாவிடம் வற்புதல் பெறப்பட்டிருக்கு, அதற்கு கை மாறாக நீதிமன்றத்தின் மன்னிப்பு இன்னும் பிறவும் இருக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
sridhar - Dar Es Salaam ,தான்சானியா
12-ஜூலை-201913:47:48 IST Report Abuse
sridhar இவ்வளவும் தெரிந்தபின் எதற்காக வழக்கு ஒத்திவைப்பு இதற்குப்பின் என்ன நடக்கிறது அவங்க வாக்குமூலம் வாங்கிட்டு அதற்கு அப்புறம் வழக்கு ஒத்தி வைத்திருக்கலாமே
Rate this:
Share this comment
Cancel
12-ஜூலை-201913:40:17 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் இனி சிதம்பரம் மற்றும் அவரின் மகனுக்கு சங்குதான்.
Rate this:
Share this comment
sridhar - Dar Es Salaam ,தான்சானியா
12-ஜூலை-201914:04:14 IST Report Abuse
sridharவழக்கு ஒத்தி வைத்த காரணமே சங்கு ஓதிட கூடாது ண்றதுக்குத்தானே இன்னுமா புரியலே...
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
12-ஜூலை-201914:13:04 IST Report Abuse
Nallavan Nallavanசிவகங்கைச் சின்னப்பையனின் நிழலைக்கூட இந்த அரசால் தீண்ட முடியாது ...... அவனுடைய செல்வாக்கு எங்கும் பரந்து விரிந்துள்ளது ...... சனியே சாரி .... சைனியே சல்யூட் அடித்து கார் கதவைத் திறக்கக்கூடிய அளவுக்கு அவனுக்கு செல்வாக்கு இருக்கிறது .......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X