சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமியை கடத்திய வாலிபர்! ரயிலில் போலீசார் தேடுதல்

Added : ஜூலை 12, 2019 | கருத்துகள் (1)
Advertisement

கோவை:கோவையை சேர்ந்த, 13 வயது சிறுமியை வாலிபர் கடத்தியது தொடர்பாக ரயிலில் போலீசார் தீவிர சோதனை செய்தனர்.பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் நிரஞ்சன்குமார், 19. கோவை, சின்னியம்பாளையத்தில் ஒரு மில்லில் வேலை செய்து வந்தார். அப்போது, 13 வயது சிறுமியிடம் பழகியுள்ளார். நேற்று காலை சிறுமி மாயமானார். பெற்றோர் புகாரின் பேரில், பீளமேடு போலீசார் நிரஞ்சன்குமார் நண்பர்களிடம் விசாரித்தனர்.
அப்போது, பீகாருக்கு சிறுமியை கடத்த வாலிபர் திட்டமிட்டதும்,இதற்காக எர்ணாகுளத்தில் இருந்து கோவை வழியாக தன்பாத் செல்லும் ரயிலில், எஸ்.7 பெட்டியில் முன்பதிவு செய்திருப்பதாக தெரிவித்தனர்.கோவைக்கு தன்பாத் ரயில் வந்தபோது ஒவ்வொரு பெட்டியாக ஏறி, போலீசார் தேடி பார்த்தனர். சிறுமி மற்றும் வாலிபர் கிடைக்கவில்லை. இதனால் ஈரோடு, திருப்பூர் ரயில்வே போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து, சிறுமியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram - Pollachi  ( Posted via: Dinamalar Windows App )
12-ஜூலை-201918:25:51 IST Report Abuse
Ram டீன் ஏஜ் பருவத்தில் உள்ள குழந்தைகளை பெற்றோர்கள் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X