பொது செய்தி

இந்தியா

பாக்.,வழி மூடல்:தினசரி ரூ.22 லட்சம் இழப்பு

Updated : ஜூலை 12, 2019 | Added : ஜூலை 12, 2019 | கருத்துகள் (10)
Advertisement

புதுடில்லி: பாகிஸ்தானின் வான்வழியை பயன்படுத்தாததால் ஏர்இந்தியாவுக்கு ரூ.22 லட்சம் இழப்பு ஏற்படுகிறது.






இது குறித்து விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி பார்லி.,யில் கூறியதாவது:


கடந்த பிப்., மாதம் காஷ்மீர் மாநிலத்தில் நிகழ்ந்த பாலகோட் தாக்குதல் சம்பவத்திற்கு பின்னர் பாகிஸ்தானின் வான்வழியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து ஏர் இந்தியா விமானங்கள் அனைத்தும் மாற்று வான்வழியை பயன்படுத்தி வந்தன. இதனால் பயண நேரம் கூடுதலாக ஆவதுடன் எரிபொருளும் கூடுதல் செலவாகிறது.







தொடர்ந்து ஏர் இந்தியாவை பல்வேறு நகரங்களுக்கு இயக்குவதற்கு ஒரு நாளைக்கு கூடுதலாக ரூ.13 லட்சம் செலவாகிறது. அதே நேரத்தில் வருவாய் இழப்பு ரூ.22 லட்சமாக உள்ளது. வான்வழியை மாற்றி பயன்படுத்தவதன் மூலம் கூடுதல் செலவு ஏற்பட்ட போதிலும் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


பிரதமர் மோடி இரண்டாவதுமுறையாக பதவியேற்ற பின்னர் கிர்கிஸ்தானில் நடந்த கூட்டத்தில் கலந்து கொள்ள சென்ற போதும் பாக்.,வான்வழியை பயன்படுத்த வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K E MUKUNDARAJAN - Chennai,இந்தியா
12-ஜூலை-201919:18:01 IST Report Abuse
K E MUKUNDARAJAN ஆப்பு அவர்களே, டிக்கட் விலை கூட்டினால் ஏர் இந்தியாவை தவிர்த்து மற்ற விமானங்களை பயன் படுத்துவர் என்ற விஷயத்தை என் நீங்கள் யோசிக்கவே இல்லை
Rate this:
Share this comment
Cancel
sankar - london,யுனைடெட் கிங்டம்
12-ஜூலை-201918:57:38 IST Report Abuse
sankar தவறான கொள்கைகளும் சலுகைகளும் தன நஷ்டத்திற்கு கரணம் ... நம்மை விட சிறிய நாடுகள் புதிய விமானங்களை கொண்டு குறைந்த விலையில் தரமான சேவையுடன் இயக்குவதை பாருங்கள் ... தவறு எங்கே என புரியும் . குறிப்பாக இந்தியர்கள் ஏன் ஏர் இந்தியாவை தவிர்க்கின்றனர் என தெரியும் .. விமானம் என்பது போக்குவரத்து கழகம் இல்லை ..
Rate this:
Share this comment
Cancel
Selvaraj Chinniah - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
12-ஜூலை-201911:39:16 IST Report Abuse
Selvaraj Chinniah நமக்கு தெரிந்த விபரத்தை நாம் கருத்து தெரிவிப்பது தவறில்லை.பாகிஸ்தான் வான் வழியை பயன் படுத்த முடியாது என்றால். பாகிஸ்தானும் நமது வான் வழியை பயன் படுத்த கூடாது. பாக்கிஸ்தான் கூட எந்த வர்த்தகமும் வைக்க கூடாது. பாக்கிஸ்தான் பொருள்களுக்கு இந்தியாவில் தடை விதிக்க வேண்டும்.இந்தியாவின் வழியாக பாக்கிஸ்தான் செல்லும் நதிகளை. நமது நாட்டிற்க்குள் திருப்பி விட வகை செய்ய வேண்டும். இதில் ஏதாவது ஒன்று. பாகிஸ்தானியர்களை சிந்திக்க வைக்கும். செயல் படுங்கள். வெற்றி பெறுவோம். வாழ்க பாரதம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X