கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கு: இன்று விசாரணை

Updated : ஜூலை 12, 2019 | Added : ஜூலை 12, 2019 | கருத்துகள் (2)
Advertisement
கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கு: இன்று விசாரணை

பெங்களூரு: கர்நாடகாவில் ம.ஜ.த. கூட்டணி கட்சியான காங்கிரசில் நிலவிய உட்கட்சி பூசல் மற்றும் ம.ஜ.த. தலைமை மீது எழுந்த அதிருப்தியால் இரு கட்சிகளையும் சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர். அரசுக்கு அளித்து வந்த ஆதரவை இரண்டு சுயேச்சை எம்.எல்.ஏ.க்களும் திரும்பப் பெற்றனர்.

ராஜினாமாவை ஏற்காமல் சபாநாயகர் ரமேஷ்குமார் காலம் தாழ்த்தினார். இதையடுத்து காங்.மற்றும் ம.ஜ.த.வைச் சேர்ந்த 10 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில் 'எங்களுடைய ராஜினாமாவை சபாநாயகர் ஏற்க வேண்டும்; தகுதி நீக்கம் செய்யக் கூடாதென சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும்' என கூறியிருந்தனர்.

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு நேற்று உத்தரவிட்ட விபரம்:

மாலை 6 மணிக்குள் சபாநாயகரை நேரில் சந்தித்து 10 எம்..எல்.ஏ.க்களும் ராஜினாமா கடிதத்தை வழங்க வேண்டும். அதன் மீது நள்ளிரவு 12 மணிக்குள் சபாநாயகர் உரிய முடிவை எடுக்க வேண்டும். இரு மாநில டி.ஜி.பி.களும் எம்.எல்.ஏ.க்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அமர்வு உத்தரவிட்டது.


சபாநாயகர் ரமேஷ்குமார் சார்பில் தாக்கல் செய்த பதில் மனு:


'ராஜினாமா குறித்து முடிவெடுக்க கூடுதல் அவகாசம் வேண்டும்; சபாநாயகருக்கு உத்தரவு போட நீதிமன்றத்துக்கும் அதிகாரமில்லை; சில எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதி நீக்க மனு நிலுவையில் உள்ளதால் அதை தான் விசாரிக்க முடியும்' என மனுவில் கோரப்பட்டது.


அப்போது அமர்வு கூறியதாவது:


இந்த விவகாரத்தில் ஏற்கனவே எங்களுடைய உத்தரவை பிறப்பித்துள்ளோம். அதை முதலில் செயல்படுத்துங்கள். உங்கள் மனுவை உடனடியாக விசாரிக்க முடியாது. நாளை (ஜூலை 12) தான் விசாரிக்கப்படும் என அமர்வு கூறியது. இதையடுத்து எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்த வழக்கு மற்றும் சபாநாயகர் மனு மீது இன்று மீண்டும் விசாரணை நடக்க உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ambika. K - bangalore,இந்தியா
12-ஜூலை-201912:54:21 IST Report Abuse
Ambika. K The speaker should be dismissed immediatly and court should ban such guys in contesting elections
Rate this:
Share this comment
Cancel
sampath, k - HOSUR,இந்தியா
12-ஜூலை-201908:46:21 IST Report Abuse
sampath, k Dismissed from MLA Post is only solution for this issue. Don't waste time. Do it immediately
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X