பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை வந்தது தண்ணீர் ரயில்

Updated : ஜூலை 12, 2019 | Added : ஜூலை 12, 2019 | கருத்துகள் (39)
Advertisement

சென்னை: ஜோலார்பேட்டையில் இருந்து, குடிநீருடன் ரயில் இன்று (ஜூலை 12) சென்னை நோக்கி புறப்பட்டது. வாழை மற்றும் மலர் தோரணங்கள் கட்டி, பூஜை செய்து தண்ணீர் ரயிலை அலுவலர்கள் அனுப்பி வைத்தனர் . இந்த ரயில் சென்னை வில்லிவாக்கம் இன்று காலை 11 30 மணியளவில் வந்து சேர்ந்தது.





சென்னையில் நிலவும் தண்ணீர்ப்பிரச்னையை போக்க ஜோலார்ப்பேட்டையில் இருந்து தினமும் 1 கோடி லிட்டர் தண்ணீர் கொண்டு வர அரசு திட்டம் தீட்டியது. அதன்படி, ஜோலார்ப்பேட்டையில் இருந்து 50 வேகன்களில் 25 லட்சம் லிட்டர் தண்ணீருடன் முதல் ரயில் வௌ்ளி காலை 7மணிவாக்கில் புறப்பட்டது. காட்பாடி, அரக்கோணம் வழியாக, பகல் 12.10 மணிக்கு சென்னை வில்லிவாக்கத்துக்கு ரயில் வந்து சேர்ந்தது. அமைச்சர்கள் வர தாமதமானதால் தண்ணீர் ரயில் முதலில் கொருக்குப்பேட்டையிலுள்ள யார்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. பிறகு, ரயில் மீண்டும் வில்லிவாக்கத்துக்கு வந்து சேர, அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி, பெஞ்சமின் முறைப்படி வரவேற்றனர். நல்ல நேரத்தில் தண்ணீரை திறந்துவிட திட்டமிடப்பட்டதால், தாமதமானதாக, அமைச்சர்கள் தெரிவித்தனர். ரயிலில் வந்த தண்ணீர் பிரத்யேகமாக பதிக்கப்பட்ட பைப்லைன்மூலம் கீழ்ப்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. தினமும் 4 ரயில்களில் 25 லட்சம் லிட்டர் தண்ணீர் வீதம் 1 கோடி தண்ணீரை சென்னைக்கு கொண்டு வருவது அரசின் திட்டம். ஆனால், ரயில் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் அடுத்த ரயில் தண்ணீரை ஏற்றி வர 2 நாளாகும் என கூறப்படுகிறது. இந்த ரயில் வியாழனன்றே சென்னைக்கு வர வேண்டியது. ஜோலார்ப்பேட்டையில் நீர்நிரப்பும்போது ஒரு வேகனில் 50,000 லிட்டருக்கு பதிலாக, 70,000 லிட்டர் வரை நிரப்பப்பட்டுவிட்டது. பிறகு, கூடுதல் தண்ணீர் தண்டவாளத்தில் வீணாக திறந்து விடப்பட்டது. இதனால் ரயில் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.


சென்னையில், குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க, வேலூர் மாவட்டம் , ஜோலார்பேட்டையில் இருந்து, ரயில் மூலம், குடிநீர் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது.
இதற்காக, ஜோலார்பேட்டை , வில்லிவாக்கம் ஆகிய இரு பகுதிகளிலும், குழாய் அமைக்கும் பணிகள் செய்யப்பட்டன. இதற்காக, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட, 50 கலன்களில், 25 லட்சம் லிட்டர் நீர், ரயில்களில் கொண்டு வரப்பட்டு, இன்று முதல், பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளது. தினசரி, நான்கு சுற்றுகள் அடிப்படையில், 1 கோடி லிட்டர் நீர் கொண்டு வரப்படும்.





ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில், கலன்களில் நீர் நிரப்பப்பட்ட, ரயில் இன்று காலை 7.30 மணியளவில் புறப்பட்டது. பகல், 11. 30 மணிக்கு, வில்லிவாக்கம் நிலையத்தை வந்தடைந்தது. அங்கிருந்து, குழாய் வழியாக, கீழ்ப்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு, நீர் கொண்டு செல்லப்பட்டு, சுத்திகரித்து வினியோகிக்கப்படும்.
50 வேகன்களில் 25 லட்சம் லிட்டர் மூலம் 4 முறை கொண்டு வரப்படும். குடிநீரை எதிர்நோக்கி மக்கள் காத்திருக்கின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (39)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
v.subramanian - madurai,இந்தியா
14-ஜூலை-201913:48:02 IST Report Abuse
v.subramanian நான் ஏற்கெனவே எழுதியது போல இன்று உபயோகித்த நீரை மறு சுழற்சி பண்ணி சுத்தப்படுத்தி மறுநாள் உபயோகிப்பதுதான் நிரந்திர தீர்வாகும் இதனால் லாரி மூலம் வாங்கும் அளவு குறையும் போர் இருந்தால் அதிலிருந்து எடுக்கும் நீரின் அளவு குறையும் நிலத்தடி மல மல என்று உயரும் நான் என் வீட்டில் உபயோகிக்கும் நீரில் டாய்லெட் நீர் தவிர மற்ற நீர் போர் பக்கத்தில் உள்ள மழைநீர் சேமிப்பு கிணற்றில் இருபது வருங்களாக விட்டுக்கொண்டிருக்கிறேன் போர் நீர் நன்றாகத்தான் இருக்கிறது குடிக்க சமையல் பண்ண RO plant தண்ணீர் உபயோக்கிறேன் இன்று Raj TV ல் நீர் மேலாண்மைப்பற்றி பேசினார்கள் நீர் மறுசுழற்சி யாரும் பேசவில்லை ஆச்சர்யமாக உள்ளது இன்று உபயோகிக்குநீரை தினமும் வெளியேவிட்டால் அவ்வளவு நாளைக்கு வெளியிலினுந்து கிடைக்கும்
Rate this:
Share this comment
Cancel
Maha - Herndon,யூ.எஸ்.ஏ
12-ஜூலை-201921:30:59 IST Report Abuse
Maha ஆ ஆ அய்யா தண்ணீர் ரயிலில் எல்லாம் வருது, மிக சிறந்த முன்னேற்றம். நியூட்ரினோ ஆராய்ச்சிக்கு பதில், நீர் சுழற்சி, நீர் மேலாண்மை, என்று அறிவியலை பயன் படுத்தாமல், நீரை அழித்து விட்டோம். வெளி நாட்டில் நீரை சுத்திகரிப்பு செய்து மறு சுழற்சி செய்து, மீண்டும் பயன்பாட்டுக்கு வருகிறது, எனவே அங்கே நீர் அழிய வாய்ப்பே இல்லை. இங்கே, பயன் பட்டு நீர், சாக்கடை அல்லது கடலில் அனுப்பி விடுகிறார்கள், நீர் அழிக்கப்படுகிறது. இப்போது ரயிலில்...நாளை ஒரு வேலை, இந்த நீர் எங்கிருந்து வருகிறதோ, அங்கும் இல்லை என்றல் ? ஒரு புறம் மிக பெரிய நியூட்ரினோ ஆராய்ச்சி, மறு புறம், 400 kilometer தொலைவில், 4 ம் இடத்தில, பெரு நகரில், நீருக்காக மக்கள் குடங்களுடன், லக்ஷக்கணக்கில், தினம் தினம் போராட்டம்…
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
12-ஜூலை-201921:11:23 IST Report Abuse
தமிழ்வேள் இந்த டேங்கர் வாகன் ஒன்றின் மொத்த கொள்ளளவு எழுபதாயிரம் லிட்டர் இதனை முழுவதும் நிரப்பினால் ஐம்பது டேங்கர்களுக்கு சுமார் முப்பந்தைந்து லட்சம் லிட்டர் நீர் வரும் ஆனால் இருபத்தைந்து லட்சம் லிட்டர் மட்டுமே நிரப்பி வருகிறார்கள் டேங்கர் வாடகை என்பது எழுபதாயிரம் லிட்டருக்கும் சேர்த்துதான் இந்த குறைந்த லிட்டர் தண்ணீர் நிரப்புவதில் ஏதாவது கோல்மால் செய்து சில்லறை அடிக்கிறார்களா? சந்தேகம் வருகிறது ஏனென்றால் இந்த கழக கூட்டங்கள் வாய்க்கரிசியிலும் காசு சம்பாதிக்கும் கூட்டம் -அதனால்தான்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X