சென்னை வந்தது தண்ணீர் ரயில்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சென்னை வந்தது தண்ணீர் ரயில்

Updated : ஜூலை 12, 2019 | Added : ஜூலை 12, 2019 | கருத்துகள் (39)
Share

சென்னை: ஜோலார்பேட்டையில் இருந்து, குடிநீருடன் ரயில் இன்று (ஜூலை 12) சென்னை நோக்கி புறப்பட்டது. வாழை மற்றும் மலர் தோரணங்கள் கட்டி, பூஜை செய்து தண்ணீர் ரயிலை அலுவலர்கள் அனுப்பி வைத்தனர் . இந்த ரயில் சென்னை வில்லிவாக்கம் இன்று காலை 11 30 மணியளவில் வந்து சேர்ந்தது.



latest tamil news



சென்னையில், குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க, வேலூர் மாவட்டம் , ஜோலார்பேட்டையில் இருந்து, ரயில் மூலம், குடிநீர் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது.
இதற்காக, ஜோலார்பேட்டை , வில்லிவாக்கம் ஆகிய இரு பகுதிகளிலும், குழாய் அமைக்கும் பணிகள் செய்யப்பட்டன. இதற்காக, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட, 50 கலன்களில், 25 லட்சம் லிட்டர் நீர், ரயில்களில் கொண்டு வரப்பட்டு, இன்று முதல், பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளது. தினசரி, நான்கு சுற்றுகள் அடிப்படையில், 1 கோடி லிட்டர் நீர் கொண்டு வரப்படும்.


latest tamil news



ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில், கலன்களில் நீர் நிரப்பப்பட்ட, ரயில் இன்று காலை 7.30 மணியளவில் புறப்பட்டது. பகல், 11. 30 மணிக்கு, வில்லிவாக்கம் நிலையத்தை வந்தடைந்தது. அங்கிருந்து, குழாய் வழியாக, கீழ்ப்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு, நீர் கொண்டு செல்லப்பட்டு, சுத்திகரித்து வினியோகிக்கப்படும்.
50 வேகன்களில் 25 லட்சம் லிட்டர் மூலம் 4 முறை கொண்டு வரப்படும். குடிநீரை எதிர்நோக்கி மக்கள் காத்திருக்கின்றனர்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X