பொது செய்தி

தமிழ்நாடு

பாலாற்றில் தடுப்பணை கட்டும் திட்டம் செயல்படுத்தப்படும்: அ.தி.மு.க., கூட்டணி வேட்பாளர் சண்முகம் பேட்டி

Added : ஜூலை 12, 2019
Advertisement

வேலூர்: ''தேர்தலில் வெற்றி பெற்றால், பாலாற்றில் தடுப்பணை கட்டும் திட்டம் செயல்படுத்தப்படும்,'' என, அ.தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர் சண்முகம் கூறினார்.
வேலூர் லோக்பா தொகுதிக்கான தேர்தல் ஆக., 5ல் நடக்கிறது. நேற்று மனு தாக்கல் செய்த பின், அ.தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி.,சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது: தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்றால், பாலாற்றில் தடுப்பணை, கோதாவரி- பாலாறு இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும். ஸ்மார்ட் சிட்டி திட்டம் விரிவாக்கம் செய்யப்படும். இரண்டு கோடி ஏழைகளுக்கு வீடு கட்டித்தரப்படும் என, பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதில், 1,000 வீடுகள் வேலூர் தொகுதியில் கட்டித்தரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


* அகிம்சா சோசியலிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் ரமேஷ், காந்தி வேடத்தில் வேட்பு மனு தாக்கல் செய்த பின், கூறியதாவது: காந்தி நோட்டு கொடுத்துதான், வேட்பாளர்கள் இப்போது போட்டியிடுகின்றனர். இந்த நோட்டை வாக்காளர்களுக்கு கொடுக்காமல், பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு பயன்படுத்தலாம். என்னிடம் கொடுக்க காந்தி நோட்டு இல்லை என்பதால், காந்தி வேடத்தில் பிரசாரம் செய்யப் போகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


* தமிழகத்தை கலக்கிக் கொண்டிருந்த சந்தன வீரப்பன், 2014 அக்., 18ல் அதிரடிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது உறவினர் சுயே., வேட்பாளராக போட்டியிடும் ராமச்சந்திரன் கூறியதாவது: எனது சொந்த ஊர் தர்மபுரி மாவட்டம், நாகமரை புதூர். நான் வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்தும், அமேதி தொகுதியில் ராகுலை எதிர்த்தும் போட்டியிட்டேன். இப்போது, 33வது முறையாக வேலூரில் போட்டியிடுகிறேன். என் மாமா வீரப்பன் அரசியலில் சேர ஆசைபட்டார். அவர் கனவு பலிக்கவில்லை. அவரது கனவை நிறைவேற்ற நான் போட்டியிடுகிறேன். என்றாவது ஒரு தேர்தலில், நிச்சயம் நான் வெற்றி பெறுவேன். இவ்வாறு அவர் கூறினார்.


* தேர்தல் மன்னன் பத்மராஜன் கூறியதாவது: சேலம் மாவட்டம், மேட்டூர் அடுத்த குஞ்சாண்டியூர் என் சொந்த ஊர். முக்கிய தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகளில், அவர்களை எதிர்த்து போட்டியிட்டு வருகிறேன். இதுவரை, 203 தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளேன். இப்போது வேலூர் தொகுதியில், 204வது முறையாக போட்டியிடுகிறேன். கின்னஸ் சாதனைக்காகவும், தேர்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் போட்டியிடுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.


* சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் ஜோலார்பேட்டையை சேர்ந்த மனிதன் கூறியதாவது: எனக்கு வயது, 2 கோடியே, 16 லட்சத்து, 668 ஆகும். 28 ஆண்டுகளாக பின்னோக்கி நடந்து வருகிறேன். 16 ஆண்டுகளாக யாரிடமும் பேசாமல் இருந்துள்ளேன். இப்போது போட்டியிடும் வேட்பாளர்கள் பணம் கொடுக்கக்கூடாது. வாக்காளர்களும் பணம் வாங்காமல் ஓட்டு போட வேண்டும். இது குறித்து தேர்தலில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X