பொது செய்தி

தமிழ்நாடு

மானாமதுரை அருகே மாட்டு வண்டி பந்தயம்

Updated : ஜூலை 12, 2019 | Added : ஜூலை 12, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 மாட்டு வண்டி, பந்தயம்

மானாமதுரை; சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே ஏ.விளாக்குளம் நிறைகுளத்து அய்யனார் கோயில் புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடந்தது. ஏ.விளாக்குளம் நிறைகுளத்து அய்யனார் கோவிலில் 2 வருடங்களுக்கு ஒரு முறை மழை பெய்ய வேண்டி புரவி எடுப்பு திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்தாண்டு கடந்த 2ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கிய விழா 9ம் தேதி நிறைவடைந்தது.
புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு இன்று காலை 7 மணிக்கு மாட்டு வண்டி பந்தயம் ஏ.விளாக்குளம் அரசு பள்ளியில் இருந்து மானாமதுரை ஒட்டு கம்பெனி வரை நடைபெற்றது. பெரிய மாட்டு வண்டிக்கு 8 கி.மீ தூரமும், சிறிய மாட்டு வண்டிக்கு 5 கி.மீ தூரமும் பந்தய எல்லையாக நிர்ணயிக்கப்பட்டது. பெரிய மாட்டு வண்டியில் ஆறு வண்டிகளும், சிறிய மாட்டு வண்டியில் 13 வண்டிகளும் போட்டியில் பங்கேற்றன. பெரிய மாட்டு வண்டியில் ஆட்டுகுளம் அழகர்மலையான் ரத்தினம் வண்டி முதலிடமும், சிறிய மாட்டுவண்டியில் பாண்டி கோயில் பாண்டியராஜன் வண்டி முதலிடமும் பிடித்தன.
வெற்றி பெற்ற மாட்டுவண்டி உரிமையாளர்களுக்கும், காளைகளுக்கும், சாரதிக்கும் தனித்தனியே ரொக்கப்பரிசுகள் வழங்கப்பட்டன. வெற்றி பெற்ற வண்டி காளைகளுக்கு வேட்டி, துண்டு, மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஏ.விளாக்குளம் கிராமத்தார் செய்திருந்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajesh -  ( Posted via: Dinamalar Android App )
12-ஜூலை-201917:18:54 IST Report Abuse
rajesh this barbaric game must be banned, these bulls are being tortured while racing, just look on the photo the guy running close to the bulls the nail on the tip of the stick . these persons must be treated in the same way
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X