யாருக்கு அதிகாரம்: கிரண்பேடி மனு தள்ளுபடி

Added : ஜூலை 12, 2019 | கருத்துகள் (26)
Advertisement
யாருக்கு அதிகாரம்: கிரண்பேடி மனு தள்ளுபடி

புதுடில்லி : புதுச்சேரியில் துணைநிலை கவர்னருக்கு உள்ள அதிகாரம் குறித்து கிரண்பேடி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் சார்பில் இதே விவகாரத்திற்காக மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்குகளை இன்று விசாரித்த சுப்ரீம் கோர்ட், கிரண்பேடி மற்றும் உள்துறை அமைச்சகத்தின் மனுக்களை தள்ளுபடி செய்தது.
புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே கூடுதல் அதிகாரம் எனவும், புதுச்சேரி அரசின் செயல்பாடுகளில் கிரண்பேடி தலையிடக் கூடாது எனவும் தீர்ப்பு வழங்கி உள்ளது. முன்னதாக இதே விவகாரம் தொடர்பாக கிரண்பேடி, சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.



புதுச்சேரியில் காங்கிரஸ் அரசுக்கும் கவர்னர் கிரண்பேடிக்கும் துவக்கத்தில் இருந்தே கருத்து வேறுபாடுகள் அதிகரித்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் மக்களால் தேர்ததெடுக்கப்பட்ட அரசுக்குத் தான் முழு அதிகாரம் உள்ளது என முதல்வர் நாராயணசாமியும் யூனியன் பிரதேசத்தில் கவர்னருக்குத் தான் அதிகாரம் என கவர்னர் கிரண்பேடியும் 'பவர் பாலிடிக்ஸ்' நடத்தி வருகின்றனர். இதுகுறித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ., லட்சுமிநாராயணன் சென்னையில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். புதுச்சேரியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரம் உள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்புக்கு எதிராக கவர்னர் கிரண்பேடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், இந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மனுதாரர்கள், சென்னை உயர்நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தியுள்ளது. தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள முதல்வர் நாராயணசாமி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குதான் அதிகாரம் உள்ளதென சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இது மக்களுக்கு கிடைத்த வெற்றி என்றும், ஜனநாயகம் வென்றுள்ள என்றும் தெரிவித்தார். மேலும் உச்சநீதிமன்றத்திற்கு நன்றி தெரிவித்துகொள்வதாகவும் கூறினார். அரசுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தவுடன் முதல்வர் நாராயணசாமி, காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிபடுத்தினார். மேலும் சட்ட சபை வளாகத்தில் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - chennai,இந்தியா
12-ஜூலை-201918:49:38 IST Report Abuse
oce அடுத்த புதுச்சேரி கவர்னர் சுப்ரமணிய சுவாமி. நாராயணசாமிக்கு சரியான ஆப்பு.
Rate this:
Share this comment
Cancel
oce - chennai,இந்தியா
12-ஜூலை-201918:46:58 IST Report Abuse
oce கிரண்பேடி விவகாரத்தை அனுமதித்தால் எல்லா மாநில கவர்னர்களும் அதையே முன்மாதிரியாக எடுப்பார்கள் என்ற அச்சத்தில் உச்ச நீதி மன்றம் கிரண் பேடி வழக்கை தள்ளுபடி செய்திருக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
12-ஜூலை-201917:30:56 IST Report Abuse
தாண்டவக்கோன் மக்கள்: Pondy assembly எங்க இருக்கு? கிரண்பேடி: ஆமதாபாத் பக்கம், வாரணாசி பக்கம் இருக்குது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X