ராஜினாமா எம்எல்ஏ படை: சுப்ரீம் கோர்ட் தடை

Updated : ஜூலை 12, 2019 | Added : ஜூலை 12, 2019 | கருத்துகள் (14)
Advertisement

புதுடில்லி : கர்நாடகாவில் ராஜினாமா கடிதம் அளித்துள்ள அதிருப்தி எம்எல்ஏ.,க்களின் ராஜினாமா குறித்து எந்த முடிவும் தற்போது எடுக்கக் கூடாது என சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது.

ராஜினாமா செய்த கர்நாடக காங்., எம்எல்ஏ.,க்கள் 10 பேரும் ராஜினாமா குறித்து முடிவு எடுக்காமல் சபாநாயகர் காலம் தாழ்த்துவதாகவும், ராஜினாமா குறித்து உடனடியாக முடிவு செய்ய சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நேற்று (ஜூலை 11) விசாரித்த சுப்ரீம் கோர்ட், மாலை 6 மணிக்குள் முடிவு எடுக்க சபாநாயகருக்கு உத்தரவிட்டது. ஆனால். ராஜினாமா குறித்து முடிவு செய்ய தனக்கு கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும் என சபாநாயகர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

ராஜினாமா செய்த கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ.,க்கள் 10 பேர் தங்களது ராஜினாமா குறித்து உடனடியாக முடிவு செய்ய சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும் எனக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஜூலை11ல் வழக்கை விசாரித்த நீதிமன்றம், மாலை 6 மணிக்குள் முடிவெடுக்க சபாநாயகர் ரமேஷ்குமாருக்கு உத்தரவிட்டது. ஆனால், சபாநாயகர் தரப்பில் கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டது. வெள்ளியன்று இதை விசாரித்த தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, கர்நாடக சபாநாயகர் உச்சநீதிமன்ற அதிகாரத்திற்கு சவால் விடுகிறாரா? என சரமாரி கேள்வி எழுப்பியது. தகுதி நீக்கத்தை தவிர்க்கவே எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா என்ற நாடகத்தை நடத்தி வருகின்றனர். அவர்களின் கோரிக்கையை ஏற்க கூடாது என சபாநாயகர் தரப்பில் வாதிப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் அமர்வு, எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா கடிதம் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என இடைக்கால தடை விதித்தது. அதிருப்தி எம்எல்ஏ.,க்களின் ராஜினாமா விவகாரத்தில் தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும் என கூறி, வழக்கு விசாரணையை ஜூலை 16க்கு ஒத்திவைத்துள்ளது. கர்நாடகாவில் முதல்வர் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்நிலையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் 13 பேர், மதசார்பற்ற ஜனதாதளம் எம்.எல்.ஏ.,க்கள் 3 பேர் என 16 பேர் ராஜினாமா செய்துள்ளனர். 2 சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கி கொண்டனர். இதனால், குமாரசாமி அரசு மெஜாரிட்டி பலத்தை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


காரசார வாதம் :


இந்நிலையில் எம்எல்ஏ.,க்கள் தொடர்ந்த வழக்கை இன்று (ஜூலை 12) விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, கர்நாடக சபாநாயகர் சுப்ரீம் கோர்ட் அதிகாரத்திற்கு சவால் விடுகிறாரா? சபாநாயகரின் அதிகாரம் பற்றி சுப்ரீம் கோர்ட் எந்த கேள்வியும் எழுப்ப கூடாது என நினைக்கிறீர்களா? என சரமாரியாக கேள்வி எழுப்பியது.
இதற்கு பதிலளித்த சபாநாயகர் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, தகுதி நீக்கத்தை தவிர்க்கவே எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா என்ற நாடகத்தை நடத்தி வருகின்றனர். அவர்களின் கோரிக்கையை ஏற்க கூடாது என வாதிட்டுள்ளார். சபாநாயகர் முன் ஆஜராகி யாரும் ராஜினாமா அளிக்கவில்லை. எப்படி ராஜினாமா மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.

இடைக்கால தடை :


இருதரப்பு வாதங்களையும் கேட்ட சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அமர்வு, எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா கடிதம் மீது தற்போது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என இடைக்கால தடை விதித்தது. அதிருப்தி எம்எல்ஏ.,க்களின் ராஜினாமா விவகாரத்தில் தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும் என கூறி, வழக்கின் விசாரணையை ஜூலை 16 ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Maha - Herndon,யூ.எஸ்.ஏ
12-ஜூலை-201921:08:16 IST Report Abuse
Maha கோடிக்கணக்கில் மக்கள் வரிப்பணத்தில், தேர்தல் நடத்தி, ஒரு தொகுதியில், லக்ஷக்கணக்கான மக்கள், தங்கள் எதிர் காலத்தை கனவுடன் நம்பி, இந்த கட்சிதான் நமக்கு நல்லது செய்யும், நல்ல குடிநீர், நல்ல மருத்துவம், நல்ல பிள்ளைகளின் எதிர் காலம், நல்ல உணவு, நல்ல வேளாண்மை….என்ற கனவுடன் ஒட்டு சாவடிக்கு சென்று, இவர் அல்லது இந்த கட்சி 5 வருடங்களுக்கு நம்மை பாதுகாக்கும், என்று வாக்களிக்கிறார்கள். அது என்ன சார், Mumbai பைவ் ஸ்டார் ஹோட்டலில், 15 MLAs கர்நாடகாவில் தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள், மும்பையில் என்ன பண்ணுகிறார்கள். இந்திய ஜனநாயகத்தில் நோக்கம் என்ன. தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள், மக்களுக்காக உழைக்க வேண்டும், பல நல்ல திட்டங்களை தீட்டி… எப்படி சார், இவர்களுக்கு மக்களின், வாழ்க்கையில் விளையாட மனம் வருது. சனநாயகம் என்பது மக்களை பற்றியது மட்டுமே. கட்சி மாறுவது, நினைத்த பொது, கொத்து கொத்தாக மாற்று கட்சிகளின் சப்போர்ட்டோடு Resign செய்வது, மற்றும் அதன் மூலம், அறுதி பெரும்பான்மை பெறாத கட்சி ஆட்சிக்கு வழி விடுவது…...மும்பை ஹோட்டலில் கும்மாளவிடுவது….சட்டப்படி சரியாக இருக்கலாம், அனால் மனசாட்சிப்படி, சரியென்று தோன்ற வில்லை, சார். அமெரிக்கா போன்ற சனநாயக நாடுகளில், இப்படி கட்சி மாறுவது இல்லை சார். சமயத்தில், நாம் இன்னும் சனநாயகத்தை கற்றுக்கொண்டுதான் உள்ளோம் என்று கூட தோன்றுகிறது. இல்லை என்றல், உங்களுக்கு ஒட்டு போட்ட அந்த ஏழை தாயின் முகத்தை ஒரு முறை சென்று பாருங்கள் சார்.
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
13-ஜூலை-201906:50:14 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்இன்னொரு ஏழை தாயின் மகனுக்கு தான் பிரதமராக நீடிப்பதில் மட்டுமே குறி....
Rate this:
Share this comment
Cancel
RajanRajan - kerala,இந்தியா
12-ஜூலை-201917:30:41 IST Report Abuse
RajanRajan அண்ணே என்னடா வடிவேலா உனக்கு என்ன குழப்பம். இனி தேர்தல் வராதுன்னு பேசிக்கிறாங்களே. கிடைக்கிற இலவச குவாட்டர் பிரியாணிக்கு வழியில்லாம பண்ணிடுமோ இந்த ஜுட்ஜ் சாமிகள். ஆகா என்னடா ஆச்சுது உனக்கு எல்லாத்தையும் தாண்டி போயி ரூம் போட்டு ஆலோசிக்கிறியடோ. ஆமா இந்த கேஸையும் ஜுட்ஜ் சாமிகள் தேதி குறிப்பிடாம ஒத்தி வச்சுட்டா அவுகளை யாரு சவால் வுட முடியும்? முடியாதே. இப்போ இருக்கிற ஆட்சிகள் தொடருமுல்லே தேர்தலே இல்லாமே அதை தான் சொல்ல வந்தேன். அறிவு பெட்டகமே போடா போயி அந்த கல்லாப்பெட்டிக்குள் இருந்துக்கோ அவனுக்காச்சும் தெளிவு பொறக்கட்டும்
Rate this:
Share this comment
Cancel
RajanRajan - kerala,இந்தியா
12-ஜூலை-201917:24:03 IST Report Abuse
RajanRajan சபாஷ், இனி இந்தியாவிலே தேர்தலே இல்லாம ஆட்சி பண்ண உச்சநீதிமன்றம் வழிவகுத்து கொடுக்கிறதோ என்று எண்ண தோன்றுகிறது. இதுவும் கோர்ட் சார்ந்த ஒரு வகை ஜனநாயகம் என்று எடுத்து கொள்ளலாம். அப்போ இனி சுடலையும் பப்புவும் மாறி மாறி வடை சுட்டு வியாபாரம் பண்ணிக்கலாம். அம்புடுதேன்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X