10 ஆண்டில் 27 கோடி பேர் வறுமையிலிருந்து மீட்பு

Updated : ஜூலை 12, 2019 | Added : ஜூலை 12, 2019 | கருத்துகள் (16)
Share
Advertisement

ஐ.நா : இந்தியாவில் 2006 முதல் 2016 வரையிலான 10 ஆண்டுகளில் 27.1 கோடி பேர் வறுமையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா., வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.latest tamil newsஐ.நா., வளர்ச்சி கழகம், ஆக்ஸ்போர்டு வறுமை மற்றும் மனித மேம்பாட்டு நிறுவனம் ஆகியன Multidimensional Poverty Index என்ற தலைப்பில் 2019 ம் ஆண்டிற்கான உலக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.

இதில், 31 குறைந்த வருவாய் கொண்ட நாடுகள், 68 நடுத்தர வருமானம் கொண்ட நாடுகள், 2 அதிக வருமானம் கொண்ட நாடுகள் என 101 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வில் 1.3 பில்லியன் மக்கள் வறுமை நிலையில் உள்ளனர். வருவாய் மட்டுமின்றி மோசமான உடல்நலம், மோசமான வேலை, வன்முறை அச்சுறுத்தல் ஆகியவற்றால் அவதியுற்று வருகின்றனர்.


latest tamil newsஇவற்றில் வங்கதேசம், கம்போடியா, காங்கோ, எத்தியோப்பியா, ஹைதி, இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், பெரு, வியட்நாம் ஆகிய நாடுகளில் வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

சமையல் எரிவாயு பயன்பாடு, சுகாதாரம், ஊட்டச்சத்து உள்ளிட்டவை வலுவான வளர்ச்சியை அடைந்துள்ளதால் வறுமை குறைந்துள்ளது. இவற்றில் இந்தியாவும், கம்போடியாவும் மிக வேகமாக வறுமை அளவை குறைத்து வருகின்றன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
13-ஜூலை-201911:14:07 IST Report Abuse
தாண்டவக்கோன் எங்க..., ஒருத்தன் sound ட கூட காணும்‼️‼️‼️‼️ ஓஹ்...., Congress period ல நடந்த விசயமா இது... அப்ப தொண்டை அடச்சிக்கறது நியாயந்தான்
Rate this:
Cancel
Gnanasekaran Vedachalam - chennai,இந்தியா
12-ஜூலை-201922:19:55 IST Report Abuse
Gnanasekaran Vedachalam வறுமை ஒழிப்பில் 27 கோடி 10 ஆண்டில் 2006-2016மிக பெரிய சாதனை இந்த மூன்று ஆண்டில் குறைந்த பட்சம் 10 கோடி பேர் மீண்டு இருக்கலாம் வேலை வாய்ப்பு பெருக்கம் வருமான ஏற்றத்தாழ்வு குறைத்தல் இதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்
Rate this:
Cancel
12-ஜூலை-201922:13:02 IST Report Abuse
ஆப்பு 2014 லேருந்து 100 கோடி பேர் வறுமைக் கோட்டிலிருந்து பணக்காரர் லெவலுக்கு உயர்த்தப் பட்டார்கள். அதான் எல்லோருக்கும் 15 லட்சம் போட்டாரே... உங்க வங்கிக் கணக்குல இன்னும் வரலியா? அவர் கிட்டே சொல்லுங்க. 5 சதவீதம் வட்டியும் சேத்து போட்டிருவாரு. எங்களுக்கெல்காம் 2015 லேயே வந்துருச்சு. நாங்களும் ஐ.நா வுக்கு தகவல் சொல்லிட்டோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X