பொது செய்தி

இந்தியா

ஹிந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே தபால்துறை தேர்வு

Updated : ஜூலை 12, 2019 | Added : ஜூலை 12, 2019 | கருத்துகள் (61)
Advertisement
Postal Department,Exams,Hindi,English,Regional Languages,Government, Notification,ஹிந்தி, ஆங்கிலம், தபால்துறை தேர்வு

புதுடில்லி: தபால்துறை தேர்வு வினாத்தாள்கள் இனி ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.






நாடு முழுவதும் நடத்தப்பட்டு வந்த தபால் துறையின் தேர்வுகளில், வினாத்தாள்கள் அந்தந்த மாநில மொழிகளிலும் வழங்கப்பட்டு வந்தன. பல ஆண்டுகளாக இருந்து வந்த இந்த நடைமுறையை தற்போது மத்திய அரசு மாற்றியுள்ளது.






இதுகுறித்து அனைத்து தபால் நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தபால்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வுகளின் வினாத்தாள்கள், ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் மட்டுமே கேட்கப்படும். மாநில மொழிகள் இடம்பெறாது. எனவே ஹிந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டுமே இனி தேர்வு எழுத வேண்டும். இது முதல் தாளுக்கு மட்டுமே பொருந்தும்.






அதே சமயம் இரண்டாம் தாளில் கேட்கப்படும் கேள்விகள், ஹிந்தி, ஆங்கிலத்துடன் மாநில மொழிகளிலும் வழங்கப்படும். இரண்டாம் தாளை மாநில மொழிகளில் தேர்வர்கள் பதிலளிக்கலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (61)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
13-ஜூலை-201912:49:20 IST Report Abuse
Nallavan Nallavan முதல்தாளில் என்ன பாடத்திட்டம், இரண்டாம் தாளில் (மாநில மொழிகளில் எழுதலாம்) என்ன பாடத்திட்டம் என்று அறியாமல் விவாதம் செய்வது வீண்தான் ...... முதல்தாளில் எந்த மாநில மொழிக்குமே இடமில்லாத வகையில் இருந்தும், "ஆட்சியாளர்கள் தமிழை ஒதுக்குகிறார்கள்" என்று சிலர் எழுதுவதுதான் எரிச்சலை ஏற்படுத்துகிறது ......
Rate this:
Share this comment
Cancel
Rajavelu E. - Gummidipoondi,இந்தியா
13-ஜூலை-201912:46:12 IST Report Abuse
Rajavelu E. இது போன்ற செயல்கள் மக்கள் மத்தியில் பிரிவினையைத்தான் உண்டாக்கும். அபாயகரமான செயல்.
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
13-ஜூலை-201912:36:24 IST Report Abuse
Nallavan Nallavan தபால் துறை மத்திய அரசின் துறை என்று முதலில் தெரிந்து கொள்ளவேண்டும் ....... அது ஒரு தேர்வு நடத்தினால், அவர்களுக்கு அனைத்து மாநில மொழிகளிலும் கேள்வித்தாள் தயாரித்தல், விடைத்தாள் திருத்த அந்தந்த மொழியறிந்தோர் என்று துவங்கி எத்தனையோ சிரமங்கள் இருக்கின்றன ..... """" ஹிந்தித் திணிப்பு வேண்டாம் ..... எங்களுக்கு நாங்கள் நன்கு அறிந்த ஆங்கிலமே போதும் """" என்று சொன்னவர்கள் நாம்தாம் ..... """" சரி .... ஹிந்தி உங்களுக்கு இல்லை ..... ஆங்கிலத்தில் கேள்விகள் உள்ளன ..... ஆங்கிலத்தில் விடையெழுதுங்கள் """" என்று சொன்னால், """" ஐயோ ..... ஐயோ ..... ஹிந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவன் நன்கு எழுதித் தேறிவிடுவானே """" என்று வயிறெரிந்தால் என்ன செய்வது ?? """" ஆங்கிலமும் அரைகுறை ..... ஹிந்தியோ வேண்டாம் ..... எங்கள் மொழியிலேயே கேள்வித்தாள் வேண்டும் ..... """" என்கிற நிலை பரிதாபமாக இருக்கிறதே ?? பல அந்நிய மொழிகளைக் கற்றறிந்து, அந்நிய நாடுகளுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்த மூவேந்தர்களை மன்னர்களாகக் கொண்டிருந்தவர்கள் நாம் ......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X