ஜெகன் - சந்திரபாபு வார்த்தைப் போர்

Updated : ஜூலை 12, 2019 | Added : ஜூலை 12, 2019 | கருத்துகள் (19)
Share
Advertisement
அமராவதி: ஆந்திர சட்டசபையில், வட்டியில்லா கடன் குறித்த விவாதத்தின் போது, ஜெகன், சந்திரபாபு இடையே வார்த்தைப் போர் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.ஆந்திரா சட்டசபையில், வட்டியில்லா கடன்கள் தொடர்பான விவாதம் காரசாரமாக நடந்தது. வட்டியில்லா கடன்கள் குறித்து தவறான தகவல்களைப் ஜெகன் பதிவு செய்வதாக தெலுங்கு தேசம் கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள் குற்றம்சாட்டி, உரிமை மீறல்

அமராவதி: ஆந்திர சட்டசபையில், வட்டியில்லா கடன் குறித்த விவாதத்தின் போது, ஜெகன், சந்திரபாபு இடையே வார்த்தைப் போர் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



latest tamil news




ஆந்திரா சட்டசபையில், வட்டியில்லா கடன்கள் தொடர்பான விவாதம் காரசாரமாக நடந்தது. வட்டியில்லா கடன்கள் குறித்து தவறான தகவல்களைப் ஜெகன் பதிவு செய்வதாக தெலுங்கு தேசம் கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள் குற்றம்சாட்டி, உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வந்தனர். ஜெகன் தவறான தகவல்களை அளித்துள்ளதை நிரூபித்தால், அவர் பதவி விலக தயாரா என சந்திரபாபு சவால் விடுத்தார்.


latest tamil news




இதற்கு ஜெகன் விளக்கமளித்துக் கொண்டிருந்த போது, தெலுங்கு தேசம் கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதில் கடுப்பான ஜெகன், 'நாங்கள் 150 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளோம். நாங்கள் எழுந்து வந்தால் நீங்கள் தரையில் கூட அமர முடியாது. முதல்வர் என்ற முறையில் நான் சமாதானம் செய்து கொண்டிருக்கிறேன். உங்களுக்கு மரியாதை, கவுரவம் துளியும் இல்லை.


latest tamil news




இதற்குமுன் சந்திரபாபு பேசும் போது, யாரும் குறுக்கே பேசாமல், நாங்கள் அமைதி காத்தோம். ஆனால் நான் பேசும் போது அறிவில்லாமல் நீங்கள் கத்துகிறீர்கள். சந்திரபாபு கண்களை பெரிதாக்கி பார்த்தால், நாங்கள் பயந்து விடுவோமா? எங்களுக்கு பயம் இல்லை. உங்கள் ஆதரவாளர்களை அமைதியாக அமர சொல்லுங்கள்' என பதிலடி தந்தார்.


கழுதை மேய்த்தீர்களா:


இதுகுறித்து விஜயவாடாவில் செய்தியாளர்களை சந்தித்த சந்திரபாபு நாயுடு, ஜெகனின் பேச்சால் வேதனை அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.


latest tamil news



இதுகுறித்து அவர் பேசியதாவது: சட்டசபையில் பொய்களை கூறி ஜெகன் சவால் விடுக்கிறார். என்னைப்பற்றியும், கட்சியை பற்றியும் மிகவும் கேவலமாக விமர்சிக்கிறார். 35 ஆண்டுகளாக எம்.எல்.ஏ.,வாக இருக்கும் நான், ஒருபோதும் இதுபோன்ற அவல நிலையை பார்க்கவில்லை.

தெலுங்கானாவில் அணைகள் கட்டப்படுவது குறித்து கூறினால், நீங்கள் ஆட்சியில் இருந்த போது கழுதை மேய்த்தீர்களா என கேட்கிறார். எங்கள் கட்சி பிரமுகரை பிணம் என விமர்சிக்கிறார். ஜெகன் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vmmoorthy Moorthy - hyderabad,இந்தியா
13-ஜூலை-201910:00:45 IST Report Abuse
Vmmoorthy Moorthy ஆம் தெலுகு தேசம் கழுதை மேய்த்தது உண்மைதான். கழுதை மேய்ப்பவனிடமும் லஞ்சம் வாங்கினார்கள்
Rate this:
Cancel
தத்வமசி - சென்னை ,இந்தியா
13-ஜூலை-201909:09:07 IST Report Abuse
தத்வமசி நரிக்கு வோட்டு போட்டால் என்ன முதலைக்கு வோட்டு போட்டால் என்ன ? அப்படித்தான் மக்கள் வோட்டு போடுகிறார்கள். இதில் எந்த கட்சிக்கும் எந்த வேறுபாடும் இல்லை.
Rate this:
Cancel
kattus - chennai,இந்தியா
13-ஜூலை-201909:02:22 IST Report Abuse
kattus யோவ் போர்னா துப்பாக்கி ,அரிவாலு எல்லாம் இல்லையா ,நாயுடு விடாத சித்தப்பு ,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X