ரிசார்ட்களில் தங்கும் கர்நாடக எம்.எல்.ஏ.,க்கள்

Updated : ஜூலை 12, 2019 | Added : ஜூலை 12, 2019 | கருத்துகள் (12)
Share
Advertisement
karnataka, kumarasamy, MLA, congress, BJP,JDS, கர்நாடக, மஜத, பாஜ, காங்கிரஸ், ரிசார்ட்

பெங்களூரு: கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த தயாராக உள்ளதாக முதல்வர் குமாரசாமி அறிவித்துள்ள நிலையில், தங்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக, அவர்களை ரிசார்ட்களில் மஜத, காங்கிரஸ், பா.ஜ., கட்சிகள் தங்க வைத்துள்ளன.

கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள கட்சிகளை சேர்ந்த 16 எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா கடிதம் அளித்துள்ளனர். இந்த கடிதம் ஏற்று கொள்ளப்பட்டால், குமாரசாமி தலைமையிலான அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. எம்எல்ஏ.,க்களின் ராஜினாமா கடிதம் குறித்து, வரும் செவ்வாய்க்கிழமை வரை முடிவெடுக்க சபாநாயகருக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், சட்டசபையில், முதல்வர் குமாரசாமி, ஆட்சி அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. மாநிலத்தில் தர்மசங்கடமான சூழல் ஏற்பட்டுள்ளதால், நான் ராஜினாமா செய்ய மாட்டேன். சபையில் பெரும்பான்மையை நிரூபிக்க தயாராக இருக்கிறேன் எனக்கூறியுள்ளார்.


latest tamil news
இதனை தொடர்ந்து பா.ஜ., காங்கிரஸ், மஜத கட்சிகள் தங்களது எம்.எல்.ஏ.,க்களை பாதுகாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளன. அவர்கள் விலை போய் விடக்கூடாது என்பதற்காக பல நடவடிக்கைளை எடுத்துள்ளன.

முதல்வர் குமாரசாமி அறிவித்ததை தொடர்ந்து, உடனடியாக தனது முதல்முறை தேர்வான எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் கட்சி மாறுவார்கள் என்ற சந்தேகத்தில் உள்ள நபர்களை, ரிசார்ட்களுக்கு அனுப்பி வைக்க பா.ஜ., முடிவு செய்துள்ளது. காங்கிரஸ் அல்ல ம.ஜ.த.,வினர் யாரும் தொடர்பு கொள்ள முடியாதபடி, பா.ஜ.,வில் உள்ள 105 எம்.எல்.ஏ.,க்களில் 80 பேரை, ரிசார்ட்களுக்கு அனுப்பி வைக்க அக்கட்சி முடிவு செய்துள்ளது.


இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள முன்னாள் முதல்வர் சித்தராமையா, பா.ஜ., எம்.எல்.ஏ.,க்களை ரிசார்ட்டுக்கு அனுப்பி வைப்பது ஏன்? தங்கள் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் அணி மாறிவிடுவார்கள் என்ற பயம் அவர்களுக்கு உள்ளது. அக்கட்சியிலேயே கறுப்பு ஆடுகள் உள்ளன. எங்கள் கட்சியில் உள்ள கறுப்பு ஆடுகள் வெளியில் சென்று விட்டன. எங்களது எம்.எல்.ஏ.,க்களை ரிசார்ட்டுக்கு அனுப்பி வைப்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றார்.


latest tamil news
இதன் இடையே, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களை பெங்களூருவுக்கு வெளியே , ரகசிய இடத்தில் தங்க வைக்க அக்கட்சி முடிவு செய்துள்ளதாகதகவல் வெளியாகியுள்ளது.

மஜதவை சேர்ந்த 30 எம்எல்ஏக்களையும் நந்திஹில்ஸ் பகுதியில் உள்ள ரிசார்ட்டுக்கு அனுப்பி வைக்க அக்கட்சி முடிவு செய்துள்ளது. அக்கட்சியை சேர்ந்த முதல்வர் குமாரசாமி, மனைவி அனிதா, சகோதரர் ரேவண்ணா ஆகியோர் மட்டும் அவர்களது வீட்டில் தங்க உள்ளனர்.


latest tamil newsAdvertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
13-ஜூலை-201909:48:54 IST Report Abuse
A.George Alphonse கர்நாடக ஸ்டேட் கௌர்ன்மென்ட் எல்லா குறுக்கு வழிகளுக்கும், யாரையும் மதிக்காத திமிர் பேச்சுக்கும் நடவடிக்கைகளுக்கும் இந்த நாட்டுக்கே ஒரு முன் மாதிரியான ஸ்டேட். இதை யாரும் மறுக்க முடியாது.
Rate this:
Cancel
Prakash - tamilnadu,இந்தியா
13-ஜூலை-201909:05:33 IST Report Abuse
Prakash சட்டசபை சென்று மக்களுக்காக நல்ல திட்டங்களை அறிவித்து அதனை நடைமுறைக்கு கொண்டு வர துப்பில்லாமல் இப்படி ரிசார்டிற்கு சென்று கூத்தாடிகள் போல் கூத்தடிக்க தான் மக்கள் இவர்களை தேர்தெடுத்து உள்ளார்களா?????? இவர்கள் எல்லாம் மக்கள் பிரதிநிதிகள்????? இனி நாட்டில் எங்கு தேர்தல் நடந்தாலும் அதனை பொது மக்கள் புறக்கணிக்க வேண்டும் அப்பொழுதாவது இவர்கள் திருந்து வார்களா???
Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
13-ஜூலை-201910:14:23 IST Report Abuse
தமிழ்வேல் அங்கு சென்றவர்கள் கூத்தாடிகளா ? அல்லது அவர்களைக் கொண்டுபோனவனா ?...
Rate this:
Cancel
Amal Anandan - chennai,இந்தியா
13-ஜூலை-201907:47:35 IST Report Abuse
Amal Anandan பிஜேபி அல்லது அவர்களுக்கு ஆதரவா இல்லைனா இப்படி படாத பாடு பாடணும் - இதுக்கு பேருதான் நவீன தேசபக்தி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X