பதிவு செய்த நாள் :
ஜூலை 16 வரை சபாநாயகர் 'கையை கட்டியது' சுப்ரீம் கோர்ட்
கர்நாடக அரசின் இடியாப்ப சிக்கல் மேலும் 4 நாட்களுக்கு தொடரும்

புதுடில்லி: 'ஜூலை 16 வரை எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா கடிதம் அல்லது எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் விவகாரத்தில் கர்நாடகா சபாநாயகர் எந்த முடிவும் எடுக்கக் கூடாது' என உச்ச நீதிமன்றம் நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

சுப்ரீம் கோர்ட்,கர்நாடகா,சபாநாயகர்,கையை கட்டியது,இடியாப்ப சிக்கல்,தொடரும்


மொத்தம் 225 இடங்களை உடைய கர்நாடக சட்டசபைக்கு 13 மாதங்களுக்கு முன் நடந்த தேர்தலில் ஆட்சி அமைக்க தேவையான 113 இடங்களை எந்த கட்சியும் பெறவில்லை. இந்நிலையில் 105 இடங்களில் வென்ற பா.ஜ. முதலில் ஆட்சி அமைத்து பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் இரண்டு நாட்களில் பதவி விலகியது. இதையடுத்து 37 இடங்களில் வென்ற மதச்சார்பற்ற ஜனதா தளமும் 79 இடங்களில் வென்ற காங்கிரசும் இணைந்து ஆட்சி அமைத்தன; முதல்வராக குமாரசாமி ஆனார்.

ஆனால் காலப்போக்கில் காங். - மதச்சார்பற்ற கட்சிகளுக்குள் ஏற்பட்ட உரசலால் கூட்டணி அரசின் கதி இப்போது அதோகதியாகி உள்ளது. காங்கிரசின் 13; மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் மூன்று எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து கடிதத்தை சபாநாயகர் ரமேஷ்குமாரிடம் அளித்துள்ளனர். அரசுக்கு அளித்து வந்த ஆதரவை இரண்டு சுயேச்சைகளும் வாபஸ் பெற்றுள்ளனர். இதனால் குமாரசாமி தலைமையிலான ஆளும் மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்துள்ளதாக கூறப்படுகிறது.

ராஜினாமா கடிதங்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்க தாமதப்படுத்தினார். காரணம் 16 பேரும் ராஜினாமா செய்தால் கூட்டணி அரசின்

பலம் 100 ஆக குறைந்து விடும்; 105 எம்.எல்.ஏ.க்களை உடைய பா.ஜ. ஆட்சிக்கு வந்து விடும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில் ராஜினாமா கடிதங்கள் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகருக்கு உத்தரவிட கோரி அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் உச்சநீதிமன்றத்தில் நேற்று முன்தினம் முறையீடு செய்தனர். இதை ஏற்று உச்சநீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது.

இந்நிலையில் சபாநாயகர் ரமேஷ்குமார் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று முன் தினம் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் 'சபாநாயகர் முடிவில் அவர் எடுக்கும் நடவடிக்கையில் உச்ச நீதிமன்றம் தலையிடக் கூடாது' என கோரப்பட்டது. இந்த வழக்குகள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் நீதிபதிகள் தீபக் குப்தா அனிருத்தா போஸ் அமர்வு முன் நேற்று விசாரிக்கப்பட்டது.

அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: கர்நாடகா எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரத்தில் பல புதிய வலுவான விஷயங்கள் எழுந்துள்ளன. அவற்றை ஒரே நாளில் விசாரித்து தீர்ப்பு வழங்க முடியாது. எனவே இந்த விவகாரம் குறித்து 16ம் தேதி மீண்டும் விசாரிக்கிறோம். அதுவரை சபாநாயகர் எந்த முடிவும் எடுக்கக் கூடாது. இன்று (நேற்று) எந்த நிலை நிலவுகிறதோ அது தொடர்ந்து நீடிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்வோம் என ஆளும் தரப்பில் மிரட்டல் விடுப்பதன் மூலம் ராஜினாமா கடிதங்களை வாபஸ் பெற வைக்க முயற்சிப்பதாக கூறப்படுகிறது. கட்சித் தாவல் தடைச்சட்டம் கொறடா உத்தரவுக்கு பணியாதது போன்ற காரணங்களில் தகுதிநீக்கமானால் ஆறு ஆண்டுகளுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியாது என்பதை மறைமுகமாக கூறி அதிருப்தியாளர்களை வளைக்க ஆளும் தரப்பு முயற்சிப்பதாக கூறப்படுகிறது. அதன்படியே சபாநாயகரும் முதலில் தகுதிநீக்கம் அதன் பிறகு ராஜினாமா கடிதங்கள் மீது முடிவு என்பதில் உறுதியாக இருந்ததால் 16ம் தேதி வரை இந்த விவகாரம் முடக்கப்பட்டுள்ளது.

Advertisement

வக்கீல்கள் காரசார வாதம்:

இந்த வழக்கு விசாரணையின் போது அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி வாதாடியதாவது: எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா விவகாரத்தில் சபாநாயகர் முடிவெடுக்கும் முன் அவர்களின் தகுதியிழப்பு குறித்து நடவடிக்கை மேற்கொள்ளக் கூடாது. அதிருப்தி எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா கடிதங்கள் மேல் சபாநாயகர் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதால் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் அவர்கள் சார்ந்த கட்சி கொறடாக்களின் உத்தரவுக்கு கட்டுப்பட்டவர்கள் என்ற நிலையை உருவாக்க அவர் முயற்சிக்கிறார். 'என்னை வந்து சந்திக்காமல் உச்சநீதிமன்றம் சென்றீர்கள் அல்லவா... நீங்கள் அங்கேயே போங்கள்' என ஊடகங்கள் முன் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் வசைபாடியுள்ளார். எனவே அவருக்கு ஒன்றிரண்டு நாட்கள் அவகாசம் கொடுக்க வேண்டும். ராஜினாமா கடிதங்கள் மீது அவர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அவர் மீது நீதிமன்ற அவதுாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ரோஹத்கி, நீதிபதிகள் உத்தரவிடும் முன் வாதாடினார்.


முதல்வர் வக்கீல் எதிர்ப்பு:

சபாநாயகர் ரமேஷ்குமார் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ''சபாநாயகர் என்பவர் அரசியல் அமைப்புச் சட்டப்படி நியமிக்கப்பட்டவர். அவரின் கடமைகளை ஆற்ற அவருக்கு உரிமை உள்ளது. அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்ய அவருக்கு உத்தரவிட வேண்டும். அது தான் அவரின் முதல் கடமையாக இருக்க வேண்டும்'' என்றார். முதல்வர் குமாரசாமி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜிவ் தவான் ''சபாநாயகருக்கு நோட்டீஸ் அனுப்பி அவர் கருத்தை கேட்காமல் உச்ச நீதிமன்றம் ஒரு தரப்பாக உத்தரவிட்டுள்ளது'' என்றார்.


Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
14-ஜூலை-201900:58:23 IST Report Abuse

Pugazh Vபாஜக பணத்தை காட்டி ரெய்டு ஆர்டரைக் காட்டி பயமுறுத்துமாம். அது தப்பில்லையாம். அந்த எம் எல் ஏ க்களைக் கட்டுக்குள் வைக்க இயலாத கட்சி என்று எழுதுவார்களாம்.

Rate this:
selvam - Chennai,இந்தியா
13-ஜூலை-201915:33:57 IST Report Abuse

selvamஊழல் பெருச்சாளிகள் என்று நேற்று வரை வசை பாடியவர்களை தம் கட்சிக்கு வரவழைத்து ஆட்சி அமைக்க துடிக்கும் பாஜக வின் கொள்கை பிடிப்பு புல்லரிக்க வைக்கிறது ... இவுங்க ஊழலை ஒழிக்க போராக ..நாம நம்பிடுவோம்

Rate this:
Suri - Chennai,இந்தியா
13-ஜூலை-201911:02:12 IST Report Abuse

Suriஇப்படிப்பட்ட அரசியல் படுகொலைகளை அனாவசியமாக செய்யும் பெருமை... பீ ஜெ பீக்கே உரித்தாகும்....எந்த அமைப்பையும் விட்டுவைக்காத செய்கைகள் பூமராங் போல திரும்பி வரும்....

Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X