பொது செய்தி

தமிழ்நாடு

புகார் பெட்டி.... புகார் பெட்டி...

Added : ஜூலை 12, 2019 | கருத்துகள் (1)
Advertisement

கெடுபிடி தேவையாதிண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு வருவோரிடம் போலீசார் அதிக கெடுபிடி காட்டுவதால் பொதுமக்கள் மனு கொடுக்க வரத்தயங்குகின்றனர். கெடுபிடிகளை கொஞ்சம் தளர்த்தினால் நல்லது.-வி.ராஜசேகர், பழநிஆபத்தான கிணறுஅய்யலுார் வடுகபட்டி பிரிவில் நெடுஞ்சாலையோரம் விபத்து ஆபத்துடன் தடுப்புச்சுவரில்லாத கிணறு உள்ளது.

இப்பகுதியில் பாதுகாப்பு தடுப்புச்சுவர் அமைக்க நெடுஞ்சாலைத்துறை முன்வர வேண்டும்.-ராஜாமணி, அய்யலுார்.தாழ்வான மின்ஒயர்வடமதுரை பம்புரெட்டி குளம் அருகில் ஏ.வி.பட்டி ரோட்டில் மின்ஒயர் தாழ்வாக செல்வதால் விபத்து அபாயம் உள்ளது. தாழ்வாக செல்லும் மின் ஒயர்களை மாற்றியமைக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ஈஸ்வரன், வடமதுரை.அமர இடம்தேவைஎரியோடு போலீஸ் ஸ்டேஷனில் புகார் தொடர்பாக வரும் பொதுமக்கள் உட்கார ஒரு பெஞ்ச் வசதி இல்லை. இதனால் பலர் மணிக்கணக்கில் நின்று கொண்டே உள்ளனர். முதியோர் பாடு திண்டாட்டமாக உள்ளது.

போலீஸ் நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும்.- -க.கந்தசாமி, கோவிலுார்.சேதமடைந்த கம்பம்வேடசந்துார் திண்டுக்கல் ரோடு பைபாஸ் பிரிவில் உயர் கோபுர மின்விளக்கு கம்பம் வாகனங்கள் மோதி மிக மோசமாக சேதம் அடைந்துள்ளது. கம்பம் முறிந்து விழும் முன் மாற்ற நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் முன்வர வேண்டும்.-ஏ.ஆறுமுகம், வேடசந்துார்.காய்ந்த மரங்கள்வேடசந்துார் - ஒட்டன்சத்திரம் ரோட்டில், பத்துக்கும் மேற்பட்ட புளியமரங்கள் காய்ந்த நிலையில் உள்ளன.
எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் ஆபத்துடன் உள்ள மரங்களை அகற்ற நெடுஞ்சாலைத் துறை நிர்வாகம் முன்வர வேண்டும்.-.ஆர்.பழனிச்சாமி, நவாமரத்துப்பட்டி. சேதமடைந்த சுற்றுச்சுவர்கே.ராமநாதபுரம் அரசு மேல்நிலை பள்ளி கட்டடத்தின் சுற்றுச்சுவர், வடபுறத்தில் இடிந்து விழுந்து நீண்ட காலமாகிறது. இதனால் பள்ளிக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. சுற்றுச்சுவரை சரிசெய்ய மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.-- ஆர்.இளமுருகு, கோவிலுார்.கழிவறை சரியில்லைபழநி அரசு மருத்துவமனையில் கழிவறைகள் சரியின்றி உள்ளன. நோயாளிகள், பொதுமக்கள் உள்ளே செல்ல முடியாத அளவு துர்நாற்றம் உள்ளது.

தண்ணீர் வசதியும் கிடையாது. முதியோர், பெண்கள் பாடு திண்டாட்டமே. சுகாதாரத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-சர்க்கரை முகமது, நெய்க்காரபட்டி.ரோட்டில் கழிவுநீர்கொடைக்கானல் அருகே வில்பட்டி ஊராட்சியில் மேல்தெரு செல்லும் ரோட்டில் வாய்க்கால் கழிவுநீர் ஆறாக ஓடுகிறது. துர்நாற்றம் எடுப்பதால் நோய் தொற்று அபாயம் உள்ளது. ஊராட்சி நிர்வாகம் சரி செய்ய வேண்டும்.-ராஜா, வில்பட்டி.

பள்ளியில் தண்ணீரில்லைபழநி கலிக்கநாயக்கன்பட்டியில் உள்ள பள்ளிக்கு தனிஇணைப்பு இருந்தும் அதன் மூலம் தண்ணீர் வழங்கப்படுவதில்லை. மாணவர்களை வெளியே அனுப்பி எடுத்து வரும்படி கூறுவதால் ஆபத்து அதிகம் உள்ளது. பள்ளிக்கு தண்ணீர் வழங்க நடவடிக்கை தேவை.-அண்ணாதுரை, பழநி.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr Rajendran Thangavel - Dindigul ,இந்தியா
13-ஜூலை-201908:42:01 IST Report Abuse
Dr Rajendran Thangavel The dog menace is a great problem in certain corporation areas of Dindigul. The stray dogs chase two wheelers, children and ole people. This happens predominatly in RM Colony, whenin two corporation sweapers while on sweping duty fell a prey to dog bite few mnths back. People in the area innocently feed the stray dogs without realizing the situation. Some people from other areas also choose to feed the dogs on RM Colony Main Road. Reaching RM Colny from Railway stattion and Bus-stand in the night time is a challenge. The RS Road, Pensioner Street, Govindapuram, Nehruji Nagar also experience the same trouble especially during night time. The concerned Corporation authorities must ply in the two-wheelers during the night time to assess the danger. A drastic action is required to save people from the dog -bite and consequentila rabies.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X