பொது செய்தி

தமிழ்நாடு

பல்கலையாகுமா பழநி கல்லுாரி

Added : ஜூலை 12, 2019
Advertisement

பழநி, : பழநியாண்டவர் கலை -பண்பாட்டுக் கல்லுாரியில் 1960 - 1970 வரை படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நடந்தது.

பழநியாண்டவர் பாலிக்டெக்னிக் கல்லுாரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா நடந்தது. இந்திய பண்பாட்டுத்துறையில் 1960 முதல் 1970 வரை படித்த முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் ரெங்கநாதன், செயலாளர் ராஜன், பொருளாளர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர்.மாணவர்கள் தங்களது கல்லுாரிகால அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். அப்போது பேராசிரியராக பணிபுரிந்த கல்லுாரியின் முன்னாள் முதல்வர் சீனிவாசன் கவுரவப்படுத்தப்பட்டார். இக்கூட்டத்தில், 'திருப்பதி கோயில் நிர்வாகம் போல பழநியாண்டவர் பெயரில் பல்கலை துவங்க வேண்டும்.

இந்திய பண்பாட்டுத்துறை பழநி கல்லுாரியில் மட்டுமே உள்ளது. மருத்துவம், பொறியியல் கல்லுாரிகள் துவங்கி, ஏற்கனவே உள்ள இசைக்கல்லுாரி, கலைக்கல்லுாரிகளை இணைத்து பழநியாண்டவர் இந்திய கலை-பண்பாட்டு பல்கலைக்கழகம் துவங்க வேண்டும்' என வலியுறுத்தினர்.ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் கே.ஆர்.அரசு மேல்நிலைப் பள்ளியில் 1981-82 ம் ஆண்டில் 10 ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள், கண்ணன் தலைமையில் ஒன்றிணைந்தனர்.

தற்போது அங்கு படிப்போரை ஊக்குவிக்கும் வகையில் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களின் மேல்படிப்புக்கு உதவ ஊக்கத் தொகை வழங்கினர். 10 ம் வகுப்பில் முதல் 3 மாணவர்களுக்கு முறையே ரூ.10 ஆயிரம், ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம், பிளஸ் 2ல் 4 பிரிவுகளிலும் மூவர் வீதம் 12 பேருக்கு மொத்தம் ரூ.32 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது.விழாவில் தலைமை ஆசிரியர் வடிவேல் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் சின்னச்சாமி வரவேற்றார்.

பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மணீஸ் முன்னிலை வகித்தார். அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் தமிழ்ச்செல்வி, டாக்டர் சதீஷ்குமார் பங்கேற்றனர். ஆசிரியர் பால்பாண்டி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X